பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சனன் தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்

'கோடி. சிலங்குவளை ஞெகிழ நாடொறும்

பாடில கவிழுங் கண்ணொடு புலம்பி ஈங்கிவண் உறைதலு முயங்குவம் (குறுந் 11)

என மாமூலனாரும்,

', 'தங்குமலை அருஞ்சுர மிறந்தவர்ப் படர்ந்து

பயிலிரு ணடுநாள் துயிலரி தாகி' (குறுந் 329)

என ஒதலாந்தையாரும்:

"மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்

பல்லிதழ் உண்கண் ப .ெ ல் லாவே'

என நரிவெரூஉத்தலையாரும்,

'கோடி ரிலங்குவளை நெகிழ நாளும்

பாடில கலிழ்ந்து பனியா னாவே

பெருங்கல் நாட!தின் நயந்தோள் கண்ணே

(குறுந் 365)

என நல்வெள்ளியாரும்,

'பாடின்றிப் பசந்தகண் பைதல பனிமல்க' (கலி. 16) எனப் பெருங்கடுங்கோவும், கண்துயில ஒல்லாக் காதலியல்பு கூறுதல் காண்க.

(10) இனிக் கனவொடு மயங்கல்' என்பது, நயந்தோர் ... * * * - - - - பிரிவால் அயர்ந்தகாதலர், கனவிற்றுனைவரைக் கண்டுகளித்து, விழித்தபின் காணாது வெருளுதலாகும்

.................. அல் கற் பொய்வ லாளன் மெய்யுறன் மரீஇய வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட ஏற்றெழுந்து அமளி தைவத் தனனே ’’ (குறுந் 39

என நன்னாகையார் குறும்பாட்டில் தலைவியும்,