பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. 2. தி தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்

கூறிய பத்துக்குற்றங்கள் உள்வழி. உண்மைக் காதல் நிலை யாதாதலின், காதல் மெய்ப்பாடுகளைக் காணுதல் அவையற்ற இடத்தாமெனச் சுட்டுதற்கு அவை இவ்வியலிறுதியிற் கூறப் பட்டன. (உ.க )

ஆய்வுரை

இது, தலைமகட்கு ஆகாதனவாகிய குற்றங்கள இவையென உணர்த்துகின்றது.

( இ-ள.) பொறாமை, கொடுமை, தம்மைப் பெரியராக வியத் தல், புறங்கூறுதல், கடுஞ்சொற் கூறல், கடைப்பிடியின்றி நெகிழ்ந் திருக்கும் சோர்வு, சோம்பல், பிறப்பினால் தம்மை உயர்ந்தாராக நினைத் தல், காதலர் இருவருள் ஒருவர் ஒருவரை விட இன்புறு வதாக எண்ணுதல், நுண்ணுணர்வின் ரிவரும் வெள்ளறிவு, மறதி, இன்னா ரையொப்பர் இன்னார் என்றெண்ணி ஒரு வரையொருவர் விரும்புதல் என இங்குச் சொல்லப்பட்ட குற்றங்கள் காதலரிரு வர்பாலும் இலலா தொழிதல் வேண்டும் என விலக்குவர் புலமைச் சான்றோர், ா-று. (உச)

இக் குற்றங்கள் யாவும் இனறித் தலைமகனபால் மெய்ப்பாடு நிகழுமெனவும், தலைமகன் பால் நிகற்குரிய மெய்ப்பாடுகள் இன்ன வையென வரையறுத்துக்கூறாது. அ வ ஸ் பால் நிகழத் தகாதன இவையென இச்சூத்திரத்தால ஆசிரியர் வரையறுத்துக் கூறினாரென வும் கருதுவர் பேராசிரியர். இவ்வி ாண்டு சூத்திரங்களாலும் காதலர் இரு வரிடையே அமையவேண் டிய உயர் குணங்களுண்மையும் குற்றங்களின் மையும் ஆகிய ஒப்பி

னா னாகிய இலக்கணங்கூறியவாறு உணரத்தகுவதாகும்.

لرته سقيةِ }

உள. கண்ணினுஞ் செவியினுந் திண்ணிதின் உணரும் உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின் நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே.

இளம்பூரணம்

என்- எனின் இது அதிகாரப்புறனடை.

(இ- ள்.) ஈண்டுச் சொல்லப்பட்ட நல்ல நயத்தினையுடைய மெய்ப்பாடெல்லாம் ஆராயுங்காற் கண்ணானுஞ் செவியானும்