பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

季,伊品 தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்

கூந்தல் வேய்ந்த விரவுமஸ் ருதிர்த்துச் சாந்துளர் நறுங்கதுப் பெண்ணெய் நீவி யமரா முகத்த ளாகித்

தமரோ ரன்னஸ் வைகறை யானே’’

(குறுந் 312)

என்பதனுள் அமராமுகத்தளாகுதலும் தமரோரன்னளாகுதலுத் தலைமகற்குப் புலனாகலின் அவை கண்ணுணர் வெனப்படும்.

ஒழிகோ யானென வழிதகக் கூறி’ (அகம். 116) என் புதித், தலைமகன்மனத்து நிகழ்ந்தவழிவெல்லாம் ஒழிகோ யானென்ற உரையானே உணர்ந்தமையின் அது செவியுணர் வெனப்படும். இங்கனம் உணர்தலும் உணர்வுடையார்க்கன்றிப் பெரிதும் அரிதென்பான் எண்ணருங்குரைத் தென்றானென்பது. (உrே}

பார தியார்

கருத்து:- இது மெய்ப்பாடுகளுக்குப் பொதுப் புறனடையாய், அவற்றினியல்பும் குறிப்பும் நுண்ணறிவில் லார்க்கு எண்ணவொண் ணாமையும் கூறுகின்றது.

பொருள்:- கண்ணினும் செவியிலும் நுண்ணிதின் உணரும் உணர்வுடை மாந்தர்க்கல்லது = காண்பதும் கேட்பதும் ஆசற ஆயும் நுண்மாண் நுழைபுலனுடையார்க்கன்றி, நன்னயப்பொருள் கோள் - சிறந்த நயத்தகு மெய்ப்பாடுகளின் இயல்பும் குறிப்பும் உணர்ந்து கோடல்; தெரியின் = ஆராயுங்கால்; எண்ணருங்குரைத்து = நினைதற்கரிது.

குறிப்பு:- முதலிருசொல்லி னும்மைகள் எண்குறிப்பன." குரையும். சற்றேகாரமும் அசைகள்: மெய்ப்பாடு உள்ளுணர் வைக் கோள்ளுதற்குதவும் குறிப்பாய்ச் சொல்லினும் செயலினும் தா ற்றுமாதலின், கண்டதும் கேட்டதும் யாப்புறக்கொண்டு தோற்றுமாதலின், கண்டதும் கேட்டது |றக்ெ டு அது விளக்கும் உளக்கிடையளக்கும் நுண்ணுணர்வு அருமைத் தென்பதைத் தெரிப்பது இச்சூத்திர நோக்காம்.

SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS

1. முதலிகு சொல்லின் உம் ைமகளாவன, இச் சூத்திரத்தில் முதற் கண் உள்ள 'கண்ணிலு:', 'செவியினும்' என்ற சொற்களில் உள்ள உம்மைகள். எண்ணருத்

குரை த்தே' என் புழிக் குரை: ஏ எ ல் பன அ ைசகன்.