பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் -து ற்பாக 座登

றிக் கற்பவர் பொருளறியாவாறு தடுமாற இவ்வியற்றமிழ்ச் சூத்திரம் இயற்றப்பட்ட தெனல் மருட்கையை விளைப்பதாகும்.

'சூத்திரந் தானே

ஆடி நிழலி லறியத் தோன்றி நாடு த லின்றிப் பொருள்நளிை விளங்க யாப்பினுட. டோன்ற யாத்தமைப் பதுவே'

எனத் தெளித்த தொல்காப்பியர் தாமே இச்சூத்திரத்தைப் பேராசிரியர் இளம்பூரணர் எனும் இருவரின் விரிவுரை கொண் டும் விளங்காமல் மயங்குமாறு யாத்துவைத்தாரென்பது பொருந்தாது.

இதுவுமன்றி, இவ்வுரைகாரர் கூறும் ஆரிய நாடக நூற் சத்துவங்கள் தொல்காப்பியர் இயற்றமிழ்ச் செய்யுளுக்குக் கூறும் மெய்ப்பாட்டுணர்வுகள் ஆகா. இதனைப் பின் மெய்ப்பாட்டு வகை விளக்கும் சூத்திரத்தின்கீழ் விரித்துக் காட்டுதும்.

இனி, எண்ணான்கு பொருளும் பின் "எள்ளல் முதடு விளையாட்டீறாக வரும் முப்பத்திரண்டுமாம்” எனக் கண்ல் கூறும் இளம்பூரணரும், 'நானான் கென்ப’ என்பதற்கு அம் முப்பத்திரண்டுமே நந்நான்காய் எண்வகை பெறும்’ என்னாமல், சுவையும் குறிப்பும் ஆகப்புறத்து நிகழும் பொருள் பதினாறாம் எனப் பொருள் கூறினர்; சுவைகளின் குறியான விறல்கள் புறத்துநிகழ்வன. சுவையும் அவற்றினகக் குறிப்பும் உள்ளுணர்வேயாமாதலின், அவற்றையும் விறல்களுடன் ஒருங்கெண்ணி ஆகப் பதினாறும் ஒராங்கே புறத்துநிகழ் பொருளெனக் கூறுதல் எவ்வாற்றானும் பொருந்தாமை ஒருதலை. ஆதலானும் அது பொருளன்மை யறிக.

ஆய்வுரை

ம ன த் தி ன ல் உய்த்துணரினல்லது ஐம்பொறிகளால் உணர்ந்து கொள்ளு தற்கு இயலாத அருவப் பொருள்கள் சில.

4. கானான்கு என்னும் இத்தொடர், காலிரைம்பது (தொல்-செய்யுள்155), காலைந்து (தொல்-செய்-204), என்றாற்போன்று பெருக்கல்வாய்பாட்டால் வந்ததேயாகும். இதனை நக்கான்கு என்றாற்போன் து அடுக்குத் தொடராகக் கொள்ளுதற்கு நூல்களில் ஆட்சியில்லை. -