பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

畿-韋 தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல்

இங்ங்ணம் இவை நான்கு சூத்திரப் பொருளும் நானான்கு பதினாறாகியும் முப்பத்திரண்டாகியும் விரியுமாகலின் இவற்றை ஒரின மாக்கி முதற்குத்திரத்து முன் வைத்தானென்பது." இனி வருஞ் சூத்திர நான்கினும் எண்ணப்படும் பொருள் ஒன்று இரண்டாகாமையின் அவை பதினாறேயாமென்பது." அஃதே யெனின் இத்துணையுங் கூறி வந்த முப்பத்திரண்டனையும்’ இனிக்கூறும் பதினாறனையும் நோக்கி முதற் சூத்திரத்துள்,

போருள்களுள் ஒன்றாக உலகவழக்கில் வழங்காமையானும், இதுகாறும் காணப். படாத தோற்றப்பொலிவினதாய்த் தன்னியல்பிலமைந்த புதுமையும் ஒன்று திரிக் து ஒன்றாதலாகிய திரிபுடைய ஆக்கமும் பொருள் வகையால் தம்முள் வேறாதலின் புதுமை என்பது ஆக்கத்துள் அடங்காமையானும் இச்சூத்திரத்தில் 'முதுமை’ எனப்பாடங்கொண்டு உரைவரைக்தோர் உரையொருக்தாது எனப் பேராசிரியர்

தரும் இவ்விளக்கம் ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்துக்கு ஏற்புடையதாகும்.

10. இவ்வியலில் கான்களஞ் சூத்திரம் முதல் ஏழாஞ் சூத்திரமுடியவுள்ள கான்கு

தத்திரங்களிலும் அதையே கூறப்புட்டி நகை, அழுகை, இனிவரல், மருட்கை என்னும மெய்ப்பாடுகள் கான்கும் எள்ளல் முதலாக கான்குகான்காகச் சொல்லப்பட்ட தத் தமக்குரிய பொருள்வகைகளால் கானான்கு பதினாறாகியும் இப்பதினாறும் தன் கண்ணும் பிறர் கண்ணும் என ஒன்று இரண்டாய் சரிடத்தும் பிறத்தலால் முப்பத்திரண்டாகியும் விளிதலால் இச் சிறப்பு கோக்கி இவை கான் கினையும் ஆசிரியர் தொல்காப்பியனார் இவ்வியல் மூன்றாஞ் சூத்திரத்து "ககையே" பழுகையினிவரல் மருட்கை" எனத் தாம் கூறும் எண்வகை மெய்ப்பாடுகளிலும் முதற்கண் வைத்தார் என்பது பேராசிரியர் தரும் விளக்கமாகும்.

11. இனி, இன்வியலில் எட்டாஞ் சூத்திரமுதல் பதினோராஞ் சூத்திர முடியவுள்ள கான்கு சூத்திரங்களிலும் முறையே கூதப்படும் அச்சம், பெருமிதம், வெகுளி: உவகை யென்னும் மெய்ப்பாடுகள் கான்கிற்கும் முறையே கான்கு கான்காகச் சொல்லப்படும் அணங்கு முதலிய பொருள்கன் தன் கண் பிறர் கண் என ஒன்று இரண்டாகாமல் இலத்றுள் ஓரிடத்தே பிறத்தலால் கானான்கு பதினாறேயாகும் என்பது பேராசிரியர் கருத்தாகும்.

12. இங்கு இத்துணையுங்கூறிவந்த முப்பத்திரண்டு என்றது, ககை முதலிய மெய்ப்பாடுகள் கான்கிற்கும் முறையே கான்கு கான்கு ஆகச் சொல்லப்பட்ட எள்ளல் முதலிய ஆக்கம் கறன்கவுள்ள பதினாறு பொருள்களும் தன் கண்ணும் பிறர் கண்ணும் ணை ஒன்று இரண்டாய் விரித்த முப்பத்திரண்டினை, -

.ே ‘இனிக் கூலும் பதினாறு’ என்றது, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை யெனப் பின்னர்க்கதப்படும் மெய்ப்பாடுகள் கான்கும் முறையே கான்கு கான்கு ஆகச் செல்லப்படும் அணங்கு முதல் விளையாட்டிறுதியாகவுள்ள பதினாறு பொ குன்கனை.