பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்பா க శ్రీ: ష్రf

பெருமிதமெனப்படும் என்றற்கென்பது. கல்வி யென்பது தவ முதலாகிய விச்சை. தறுகணென்பது அஞ்சுதக்கன கண்ட இடத்து அஞ்சாமை. இசைமை யென்பது இன்பமும் பொருளும் இறப்பப் பயப்பினும் பழியொடுவருவன செய்யாமை. கொடை யென்பது உயிரும் உடம்பும் உறுப்பும் முதலாகிய எல்லாப் பொருளுங் கொடுத்தல்.’

உ-ம். 'வல்லார் முன் சொல்வல்லேன் என்னைப் பிறர்முன்னர்த் கல்லாமை காட்டி யவள்’’ (கலி. 14:)

என்பது கல்விபற்றிய பெருமிதம்; என்னை? என்னையுங் கலலாமை காட்டினாளெனத் தன் பெருமிதங் கூறினமையின்.

'அடன்மாமேல் ஆற்றுவேன் என்னை மடன்மாமேன் மன்றம் படர்வித் தவள்’’ (கவி. 141)

என்பது தறுகண்.

'கழியாக் காதல ராயினுஞ் சான்றோர்

பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்' (அகம். 1.12)

என்பது புகழ்.

'வையம், புரவூக்கும் உள்ளத்தேன் என்னை யிரவூக்கும்

இன்னா இடும்பைசெய் தாள்' (கலி. 141)

என்பது கொடை.

'தன்னகம் புக்க குறுநடைப் புறவின்

தபுதி யஞ்சிச் சீரை புக்க வரையா ஈகை உரவோன் மருக' (புறம், 43)

என்பதும் அது.

1. பெருமிதம் எனினும் வீரம் எனினும் பொருளால் ஒன்றே என்பது பேரா சிரியர் கருத்தாகும்.

மிதம் - அளவு, பெருமிதம் - பேரெல்லை. விச்சை - வித்தை அறிவுத்துறை. தறுகண் - மனத்திண்மை. இசைமை - புகழ்த்திறம்,

ஈண்டுக்காமம் என்றது தலைமக்களாயினாரது கிறையொ டுபொருக்திய காப காமத்தினை,

பெருமிதம் என்னும் இது, தன் கண் தோன்றிய கல்வி தறுகண் இசைமை கொடை யென்னும் பொருள் பற்றி வரும் என்பதாம்.