பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器鲁 தொல்காப்பியம் பாணினிக்கும் இடைப்பட்ட காலம் 1920-ஆண்டுகளாம். பாணினி யார் கி. மு. 700-ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அவர் இயற்றிய இலக்கண நூலுக்குப் பேருரை எழுதிய பதஞ்சலி முனிவர் கி. மு. 150-ல் வாழ்ந்தனர் என ஆராய்ச்சியாளர் அறுதியிட்டுரைப்பர். ஆகவே கி. மு. இரண்டாம் நூற்ருண்டுக்கு முற்பட்டது பாணினியம் என்பது நன்கு புலம்ை. ஆராய்ச்சியாளர் பலரும் கி. மு. நான்கு அல்லது ஐந்தாம் நூற்ருண்டிற்கு முற்பட்டவர் பாணினி முனிவர் என முடிவு செய்துள்ளார்கள். தொல்காப்பியரைது வடமொழி வியாகரணப் பயிற்சியைச் சிறப்பிக்கக் கருதிய பனம்பாரளுர், ஐந்திரம் நிறைந்த தொல் காப்பியன் என அவ்வாசிரியரைப் போற்றுதலால் வடமொழியின் சிறந்த இலக்கண நூலாக அவர் காலத்து வழங்கியது ஐந்திர வியாகாரணமே என்பது நன்கு துணியப்படும் ஐந்திர வியா கரணத்தினும் திறம்பட அமைந்த இலக்கண நூல்பாணினி முனி வரால் இயற்றப்பெற்ற அஷ்டாத்தியாயி என்பதே வடமொழி வல்லார் கருத்தாகும். பாணினி முனிவரால் இயற்றப்பெற்ற அஷ்டாத்தியாயி என்னும் இந்நூல், தொல்காப்பியனர் காலத் தில் வழங்கியிருக்குமாயின், அவர் காலத்தவர் பாணினியப் பயிற்சியையே சிறப்புடையதாகப் பாராட்டியிருப்பர். தொல்காப் பியனர் காலத்தில் ஐந்திரத்தைக் காட்டிலும் சிறப்புடைய வட மொழி வியாகரணம் வேருென்றுமில்லையென்ற கருத்திலேயே 'ஐந்திர நிறைந்த தொல்காப்பியன்' எனப் பனம்பாரளுர் ஐந்திர நூற் பயிற்சியைச் சிறப்பித்து எடுத்துப் பேசுகின்றர். அன்றியும் பாணினியம் தொல்காப்பியர் காலத்தில் வழங்கியிருக்குமாயின் ஒரு முதனிலையிற் பிறந்த பல சொற்களை ஆராய்ந்து அவ்வம் முதனிலைகளிற் கொணர்ந்து அடக்கும் பாணினியின் இலக்கண முறையினைத் தொல்காப்பியனுர் தம் நூலுள் யாண்டேனும் சுட்டி யிருப்பர். பின் வந்த நன்னூலார் இவ்விலக்கண முறையினைக் குறிப்பிடுதல் காண்க. அத்தகைய குறிப்பெதுவும் தொல்காப்பி