பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு $3 திந்திரன் காட்டிய நூலின் மெய்ப்பாட்டியற்கையின் விளங்கக் காணுய் எனவரும் கவுந்தியடிகள் மறுமொழியால் சமணர் ஐந்திர நூற் பயிற்சியைப் பொருட்படுத்தாமையை இளங்கோவடிகள் குறிப்பித்தாராவர். இங்ங்ணம் இளங்கோவடிகளும் திருநாவுக்கரசடிகளாரும் இந்திரன் செய்த நூலினை வேத வழக்கொடு பொருந்திய நூலாகவே குறிப்பிடுதலாலும், வடமொழி யாசிரியர்களும் அங்ங்னமே கருதினமை முன்னர்க் குறித்து விளக்கப்பட்டமை யாலும், ஐந்திர வியாகரணம் வைதிகசமயச் சார்புடையதென் பது நன்கு துணியப்படும். உண்மையிங்ங்னமாகவும். ஐந்திர நூற்பொருள் சமண சமயத்தார்க்கே சிறப்புரிமையுடையதென்றும், ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தொல்காப்பியஞர் பாராட்டப் பெறுதலால் அவர் பயின்ற ஐந்திரம் கி பி. ஐந்தாம் நூற்ருண்டில் சமணராற் செய்யப்பட்ட ஜைநேந்திரமென்றும், அந்நூலைப் பயின்ற தொல்காப்பியருைம் சமண சமயத்தாராவ ரென்றும் ஆராய்ச்சியாளரொருவர் கூறியுள்ளார். அவர் கூற்று வரலாற்று முறைக்கு மாறுபட்டதென்பது ஐந்திரத்தைப்பற்றி முற்கூறிய செய்திகளால் நன்கு புலளும். வேதகாலத்தை யொட்டிய வடமொழி யிலக்கியங்களிலமைந்த மொழிநடையினை யுளத்துட்கொண்டு எளிய முறையில் இயற்றப்பெற்ற வடமொழித் தொன்மை வியாகரணமே ஐந்திரம் எனப் பண்டைச் சான்ருேள் பலருங் கூறியுள்ளார்கள். அக்கொள்கையே வரம்பின் வழிநின்று ஆராயும் ஆராய்ச்சி முறைக்குப் பொருந்துவதென்க. படிமையோன் "பல்புகழ் நிறுத்த படிமையோன் எனவருஞ் சிறப்புப்பாயிரத் தொடர்க்குப் பல புகழ்களையும் இவ்வுலகின் கண்ணே மாயாமல் நிறுத்திய தவவேடத்தையுடையோன் என நச்சிஞர்க்கினியர் பொருள்கூறுவர். படிமை என்னுஞ்சொல் தவவொழுக்கத்தினை