பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$6 தொல்காப்பியம் தொல்காப்பியர்ை காலம் இப்பொழுது கிடைத்துள்ள தமிழ் நூல்களெல்லாவற்றிற்கும் மிகமிகத் தொன்மை வாய்ந்தது தொல்காப்பியமாகும். எட்டுத் தொகை நூல்களுளொன்ருகிய புறநானூற்றிற் காலத்தால் மிகப் பழைய பாடல்களும் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றின் சொற் பொருளமைதியினை ஆராயுங்கால் இயற்றமிழ் நூலாகிய தொல் காப்பியம் சங்கத் தொகை நூல்களெல்லாவற்றிற்கும் காலத்தால் முற்பட்டதென்பது நன்கு புலம்ை. கயவாகு என்னும் பெயருடைய வேந்தர் இருவர் இலங்கை யில் ஆட்சி புரிந்துள்ளார்கள். அவர்களுள் முதற்கயவாகுவின் காலம் கி. பி. 71-193 என்பது ஆராய்ச்சியாளர் துணிபு. செங்குட்டுவனென்னும் சேரமன்னன், கண்ணகியார்க்குத் திருவுரு வமைத்துக் கோயிலெடுத்துக் கடவுண் மங்கலஞ் செய்த நாளில், இலங்கை வேந்தனுகிய கயவாகு வஞ்சி நகரத்திற்கு வந்து கண்ணகியாரை வழிபட்டு வரம்பெற்றுச் சென்ருன் எனச் செங்குட்டுவற்குத் தம்பியாகிய இளங்கோவடிகள் தாமியற்றிய சிலப்பதிகாரத்திற் குறிப்பிட்டுள்ளார். எனவே இளங்கோவடிகள் காலம் கி.பி. இரண்டாம் நூற்ருண்டென்பது தெளிவாதல் காண லாம். இளங்கோவடிகளும், அவர் காலத்தும் அவர்க்கு முன்னும் வாழ்ந்த சங்கப் புலவர்களும் தெய்வப் புலவர் இயற்றிய திருக்குறளிலுள்ள சொற்ருெடர்களையும் கருத்துக்களையும் அவ் வாறே எடுத்தாண்டுள்ளார்கள். ஆகவே திருக்குறளாசிரியர் திருவள்ளுவனர் காலம் கி.மு. முதல் நூற்ருண்டெனக் கொள் ளுதல் ஏற்புடையதாகும். தொல்காப்பியத்தை யடியொற்றியது திருக்குறள் தொல்காப்பியமாகிய இயற்றமிழ் நூலினை வரம்பாகக் கொண்டே ஆசிரியர் திருவள்ளுவனர் உலகப் பொதுமறை 1. திரு. தி. வை. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் எழுதிய தமிழிலக்கிய வரலாறு (கி.பி. 250-600) பக்கம் 2, 3.