பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 39 எளியவாகக் கேட்டுணரும் ஆற்றலும் அறிவின் இரு திறன்களென் பது, மேற்கூறிய இரு சூத்திரங்களின் கருத்தாகும். இவ்விரு சூத்திரங்களின் கருத்தினையும் ஆசிரியர் திருவள்ளுவனர் எண் பொருளவாகச் செலச்சொல்லித்தான் பிறர்வாய், நுண் பொருள் காண்பதறிவு என அறிவினது இலக்கணம் கூறும் வழி எடுத் தாண்டுள்ளார். இதுகாறும் எடுத்துக்காட்டியவாற்ருல் ஆசிரியர் திருவள்ளுவளுர் இயற்றிய திருக்குறள், தொல் காப்பியக் கருத் துக்களையும் சொற்ருெடர்களையும் தன்னகத்தே கொண்டு விள்ங்கு கின்றமை நன்கு புலனுதல் காணலாம். தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் தொல்காப்பிய விதிக்கு மாருன சொல் வழக்குகள் சில திருக்குறளிலும் சங்கத் தொகை நூல்களிலும் காணப்படுகின்றன. தொல்காப்பியனர் காலத்தில் 'கள்' என்னும் பன்மை விகுதி அஃறிணையில் மட்டுமே வழங்கியது. கள்ளொடு சிவனுமவ் வியற் பெயரே, கொள்வழியுடைய பலவறி சொற்கே, என வரும் சூத்திரத்தால் இவ்வுண்மை புலனும். பூரியர்கள் (919) மற்றைய வர்கள் (263) எனத் திருக்குறளிலும், தீதுதிர் சிறப்பின் ஐவர் கள் நிலைபோல' (கலி-26) எனக் கலித்தொகையிலும் உயர் திணைப் பெயரை யடுத்துக் கள் விகுதி பயின்று வழங்குவதற் குத் தொல்காப்பியத்தில் விதி கூறப்படவில்லை. அன் விகுதி ஆண்பாற் படர்க்கைக்கே யுரியதெனக் தொல்காப்பியர் வரை யறுத்துள்ளார். இவ்விதிக்கு மாருக இரப்பன் இரப்பாரை யெல்லாம் என வருந் திருக்குறளில் அன்விகுதி தன்மை யொரு மையில் வழங்குகின்றது. இவ்வாறே கைவிடுகலனே (அகம்193) உதவியோ வுடையன் (அகம்-186) நினக்கியான் கிளைஞ னல்லனே’ (அகம்-343) யான் வாழலனே’ (அகம்-362) 'உள்ளாராயினு முளனே (அகம்-373) “மிகுதி கண்டன்ருேவிலனே' (அகம்-379) நனியறிந்தன்ருேவிலனே' (அகம்-384) அமளிதை வந்தனனே அளியன் யானே (குறுந்-30) நீயலன் யானென