பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9鑫 தொல்காப்பியம் சங்கச் செய்யுட்களில் அருகிக் காணப்படும் சமய விகற் பங்களைப்பற்றிய குறிப்புக்கள், தொல்காப்பியத்தில் அறவே காணப்படவில்லை. மாயோன், சேயோன், வருணன், வேந்தன் என்னும் நானிலத் தெய்வங்களுடன் வெற்றி விளக்குங் கொற்றவையும், நிலப்பாகுபாடின்றி எல்லா நிலத்திற்கும் உரிய தாகிய கடவுளும் தமிழர்களால் வழிபடப்பெற்ற தெய்வங்களாகத் தொல்காப்பியனர் குறிப்பிடுகின்ருர், கடைச் சங்க நாளில் 'காரியுண்டிக் கடவுள்' எனவும், மாற்றருங்கணிச்சி மணிமிடற் ருேன் எனவும், முக்கண்ணுன் எனவும், எல்லாம்வல்ல இறை வன உருவநிலையில் வைத்துப் போற்றும் வழிபாடு பெருகிக் காணப்படுகின்றது. திருமால் வழிபாட்டில் செங்கட்காரி (வாசு தேவன்), கருங்கண்வெள்ளை (சங்கருடணன்) பொன்கட் பச்சை (பிரத்தியும் நன்) பைங்கண்மால் (அநிருத்தன்) என வரும் நால்வகை வியூகமும் பரிபாடலிற் சொல்லப்பட்டுள்ளன. சிவன், பலதேவன், திருமால், முருகன் ஆகிய நால்வரையும் 'ஞாலங்காக்கும் காலமுன்பின் தோலாநல்லிசை நால்வர் எனக் கடைச் சங்ககாலத் தமிழர் பரவிப்போற்றினர். இந்நாற்பெருந் தெய்வங்களுக்குரிய கோயில்கள் தமிழ்நாட்டுப் பேருர்களில் அமைக்கப் பெற்றிருந்த இயல்பினை இளங்கோவடிகளும் சாத்த ஞரும் தம் நூல்களில் விளக்கியுள்ளார்கள். பலதேவன், ஞாயிறு, காமன், சேயோன், சிவன் ஆகிய தெய்வங்களைத் தீதுதிர் சிறப் பின் ஐவர்கள் எனப் பெருங்கடுங்கோ பாராட்டுகின்ருர். காமன் வழிபாடு கடைச்சங்க காலத்திற் சிறப்புற்று விளங்குகிறது காமன் தொல்காப்பியத்திற் சொல்லப்படாத புதுத் தெய்வமாவான். சமண புத்த சமயங்களைப் பற்றிய குறிப்புக்கள் கடைச்சங்க நூல் களில் இடம் பெற்றுள்ளன. 2500 ஆண்டுகளுக்குமுன் சமணர் களும் புத்தர்களும் தமிழ் நாட்டில் இடம்பெறவில்லை. எரிவலஞ் செய்தல் முதலிய ஆரிய நாகரிகத்தினை ஒரு சிலர் மேற்கொண் டொழுகினமை சங்கத்தொகை நூலில் விரித்துரைக்கப் பெறு