பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

劈器 தொல்காப்பியம் இளங்கோவடிகள் தம் குல முதல்வகிைய இவனது ஈகைத் திறத்தை யெடுத்துரைத்தலானும் இவ்வேந்தன் பாரதப்போர் நிகழ்ந்த காலத்தில் உடனிருந்து உதவியவன் என்பதிற் சிறிதும் ஐயமில்லையென்க." இனி, உதியஞ்சேரலென்பான் பாரதப் போரில் இறந்த வீரர்களைப் போற்றுமுகத்தான் அவர் பொருட்டுப் போர்க்களத் தில் பெரும் பலியாகிய பிண்டங்களை வழங்கிெைனனவும், அது குறித்துப் பெருஞ்சோற் றுதியஞ்சேரலாதனென்று அழைக்கப் பெற்ருனெனவும், "மறப்படைக் குதிரை மாரு மைந்தின் துறக்க மெய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ் சேரல் பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை யிரும்பல் கூளிச் சுற்றம் குழீஇ யிருந்தாங்கு” (ஆகம்-233) எனவரும் மாமுலஞர் பாடலைக்கொண்டு முன்னர்க்காட்டிய முரஞ்சியூர் முடிநாகராயர் பாடலுக்குப் பொருள் காணும்பொழுது, ஈரைம்பதின்மரும் பொருதுளகத்தொழிந்த அளவில், இவ்வுதியஞ் சேரலென்பான், ஆண்டு இருபடையினும் இறந்தார்:பொருட்டுப் பெருஞ்சோறு கொடுத்தான் என்று துணிவதே பொருந்திய தாகு மெனவும், இருபெரும் படையுங் கலகப்பட்டுத் தடுமாறு தற்குரிய பெரும்போர் நிலையில் அவ்விருபடைக்கும் நடுநின்று ஒருவன் சோறு வழங்கினன் எனக் கூறுவதில் முட்டுப்பாடு பலவாகு மெனவும் இம்முட்டுப்பாடு தீர்ந்து உள்ளவாறு இதுவென்று தெளி விப்பது மாமூலஞர் பாடிய233-ஆம் அகப்பாட்டெனவும் மகாவித்து வான் ரா. இராகவையங்காரவர்கள் கூறியுள்ளார்கள். பாண்ட வரும் நூற்றுவரும் பொருத போர்நிகழ்ச்சியிலேயே இருதிறத் 1. மாணிக்கவாசகர் காலம், பக்கம், 79. 2. தமிழ் வரலாறு, முதற் பதிப்பு) பக்கம், 231, 232.