பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#00 தொல்காப்பியம் நினைந்து வழிபடும் நிலையில் அம்முன்ளுேரைக் குறித்துப் பெருஞ் சோறு வழங்கினுனென்றும், அவன் வழங்கிய சோற்றுத் திரளே வீரர் திரளாகிய கூளிச் சுற்றங்கள் கூடியிருந்து உண்டன வென்றும் அப்பாடலால் அறிகின்ருேம். தமிழர்கள் தம் குடியி லிறந்த முன்னுேரை வழிபடுதலை முதற்கடமையாகக் கொண் டொழுகினமை தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் என்ருங், கைம்புலத்தா ருேம்பல் தலை' எனவும், தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும். பொன்போற் புதல்வர்' எனவும், வருந் தொடர்களாற் புலனும். சேரமன்னர்கள் தம் குடியில் இறந்த முன்னுேரை வழிபடுதலே முதற் கடமையாகக் கருதிப் போற்றினமை இளந்துணைப் புதல்வரின் முதியோர்ப் பேணித் தொல்கடனிறுத்த வெல்போரண்ணல் (பதிற்-70) என வருந் தொடரால் நன்கு விளக்கப்பட்டது. இங்ஙனமே மாமுல ஞராற் போற்றப்பெற்ற உதியஞ்சேரலும் தன்குடியிற் ருேன்றிப் போர் வலியால் துறக்கம் எய்திய தன் முன்னுேரை வழிபட்டுப் பெருஞ்சோற்று விழா நிகழ்த்தினுன் எனத் தெரிகிறது. உதியஞ் சேரல் என்னும் இவ்வேந்தனுல் வணங்கப்பெற்ற 'மறப்படைக் குதிரை மாரு மைந்தின் துறக்கமெய்திய தொய்யா நல்லிசை முதியர்' என்போர், இவ்வேந்தனது குடியிற் பிறந்து போர் வலியாற் பகைவரை வென்று வீரசுவர்க்க மெய்திய இவனுடைய குடிமுதல்வரேயாவர். இவர்களைப் பாரதப் போரில் இறந்த நூற்றுவர் முதலிய வடநாட்டு மன்னர்களாகக் கொள்ளுதற்கு மாமூலனர் பாடலில் எத்தகைய சொற் குறிப்பும் இல்லை. தமிழ் மன்னனுகிய உதியஞ்சேரலென்பான் துரியோதனன் முதலிய வடவேந்தர்களைத் தன் குலமுதல்வராகக் கருதிப் பிண்டம் வழங்கு தற்கு யாதொரு தொடர்புமில்லை. அன்றியும் துரியோதனன் 1. கூளிச் சுற்றம்-ஏவல் செய்யும் போர் விரர் குழு. சூேர்நவை முருகன் சுற்றத் தன் னநின் கூர்நல் லம்பிற் கொடுவிற் கூளியர்' (புறம்-23) எனக் கல்லாடர்ை கூறுதல் இவண் ஒப்புநோக்குதற்குரியதாம்.