பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§4 தொல்காப்பியம் தொட்டு வழங்கும் வரலாருதலால் அவ்வாசிரியர் பாரத காலத் துக்கு மிகவும் முற்பட்டவரென்பது நன்கு தெளியப்படும். "வடவேங்கடந் தென்குமரி யெனத் தொடங்கும் பனம்பார ஞர் பாயிரத்தில் நான்மறை யெனக் குறிக்கப்பட்டவை தைத்திரியமும் பெளடிகமுந் தலவகாரமும் சாமவேதமும் ஆம் எனவும், தொல்காப்பியஞர் இந்நூல் (தொல்காப்பியம்) செய்த பின்னர், வேதவியாதர் சின்னுட் பல்பிணிச் சிற்றறிவினேர் உணர்தற்கு இவற்றை இருக்கும் யசுவும் சாமமும் அதர்வணமும் என நான்கு கூருகச் செய்தாராதலின், பனம்பாரளுர் பாயிரத்தில் நான்மறையெனக் குறிக்கப்பட்டன. இருக்கு முதலிய நான் கென்றல் பொருந்தாதெனவும் ஆசிரியர் நச்சிஞர்க்கினியர் சிறப்புப் பாயிரவுரையில் இனிது விளக்குகின்ருர். எனவே வடமொழி வேதங்களை வகுத்த வேதவியாதர் காலத்துக்கு மிகவும் முற்பட்டவர் ஆசிரியர் தொல்காப்பியனர் என்னும் உண்மையினை நச்சிஞர்க்கினியரும் உடன்பட்டு விளக்கினராவர். தமிழரது பழைய வரலாற்றினைப்பற்றிய முடிபுகள் சில, இறையனர் களவியலுரையிலும் தொல்காப்பியத்திற்கு இளம் பூரணர், பேராசிரியர், நச்சினர்க்கினியர் ஆகிய உரையாசிரியர்கள் எழுதிய உரைப் பகுதிகளிலும், சிலப்பதிகாரம் அடியார்க்குநல்லா ருரையிலும் காணப்படுகின்றன. இம்முடிபுகள் வரலாற்ருராய்ச்சி யாளர் ஆராய்ந்து கண்ட முடிபுகளோடு ஒருபுடையொத்து நிற்கின்றன. எனவே இவையெல்லாவற்றையும் கட்டுக் கதை களெனத் தள்ளிவிடுதற்கில்லை. ஆசிரியர் தொல்காப்பியனர் காலம் இ.தெனத் துணிதற்கு இவ்வுரை நூன் முடிபுகள் பெரிதும் பயன்படுமென்பது உறுதி. பாண்டிய மன்னர்கள் கல்வி வளர்ச்சி குறித்து மூன்று முறை தமிழ்ச் சங்கங்களை நிறுவித் தமிழ் வளர்த்த வரலாறு, இறையனர் களவியலுரையினுள்ளே விரித்துக் கூறப்பெற்றது.