பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

烹调 யிலே முயற்சி செய்து இவ்வரிய ஆராய்ச்சி நூலைத் திறம்பெற ஆக்கியுள்ளார்கள். இந்நூல் இரண்டு பகுதிகளாக அமைந்துளது. இதன் முதற்பகுதி, தொல்காப்பியத்தின் தோற்றம் பற்றியும், இந் நூலாசிரியர் தொல்காப்பியனர் வாழ்ந்த காலம், நூல் செய்த காரணம் முதலியன பற்றியும், இறையனர் களவியலுரையாசிரியர், இளம்பூரணர், பேராசிரியர், அடியார்க்கு நல்லார், நச்சினர்க் கினியர் முதலிய பண்டைச் சான்ருேர் வெளியிட்டுள்ள அரிய கருத்துக்களையும் அவைபற்றி இக்கால ஆராய்ச்சியாளர் வெளி யிட்டுள்ள பல்வேறு கருத்துக்களையும் ஒப்பவைத்து ஆராய்ந்து விளக்கும் முறையில் அமைந்துளது. இதன்கண் தொல்காப்பிய ஞர் காலம் சமயம் முதலியன பற்றி இக்காலத்தில் அறிஞர் சிலர் வேறுபடக் கூறிய முடிபுகள் சில தக்க காரணங்காட்டி மறுக்கப் பட்டிருத்தல் காணலாம். இதன் இரண்டாம் பகுதி, தொல்காப்பியம் நுதலிய பொருளேச் சுருக்கமும் தெளிவும் பொருந்த விளக்குவது. எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகிய முன்றதிகாரங்களிலும் ஆசிரியர் தொல்காப்பியனர் கூறிய இலக் கண விதிகளை முன்னெடுபின் மலைவற ஒரு நெறிப்படத் தொகுத் தும் வகுத்தும் விளக்கும் முறையில் எளிய உரைநடையாக எழுதப்பெற்றுள்ளது. இதன்கண் தொல்காப்பியச் சூத்திரங் களுக்கு உரைகாணும் முறையில் இளம்பூரணர், பேராசிரியர், நச்சிர்ைக்கினியர் முதலிய பண்டை யுரையாசிரியர்கள் எழுதிய உரைவிகற்பங்கள் பல இடையிடையே நூலகத்தும் அடிக்குறிப் பிலும் எடுத்துக்காட்டி விளக்கப்பெற்றுள்ளன. இப்பகுதி பல்கலைக் கழக மாணவர்களும் பிறரும், தொல்காப்பிய நூற்பொருளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் அறிந்துகொள்வதற்குப் பெரிதும் துணைசெய்யும் என நம்புகின்றேன். கோ. சுப்பிரமணியம்