பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 翌墨憩 'இஹ கஸ்சித் ஸ்மாஸா: பூர்வ பாதார்த்த ப்ரதாந: கஸ்சித் உத்தர பதார்த்த ப்ரதா ந: கஸ்சித் அந்ய பதார்த்த ப்ரதாந: கஸ்சித் உபய பதார்த்த ப்ரதாந: ' எனவரும் பகுதி பதஞ்சலி மாபாடியத்திற் காணப்படும் வாக்கிய மாகும். இவ்வாக்கியத்தைப் பின்பற்றியே ஆசிரியர் தொல் காப்பியனுர், "அவைதாம் முன்மொழி நிலையலும் பின்மொழி நிலையலும் இருமொழிமேலும் ஒருங்குடன் நிலையலும் அம்மொழி நிலையா தன்மொழி நிலையலும் அந்நான் கென்ப பொருள்நிலை மரபே." எனத் தொகைச் சொற்களின் பொருள்நிலை மரபினைக் கூறி யுள்ளாரென்றும், இப்பாகுபாட்டினை முதன்முதலாக எடுத்துக் கூறியவர் பதஞ்சலி முனிவரே யென்றும், இலக்கணம் என்பது "லக்ஷண என்ற வடமொழியின் பிராகிருதத் திரியென்றும், "ஸ்ப்தோ லகஷ்ய சூத்ரம் லக்ஷணம்’ ’ எனவும், நலகூடிணே பதகாரா அதுவர்த்யா, பதகாரை: நாமலக்ஷணம் அதுவர்த்யம்' எனவும், பதஞ்சலி முனிவர் 'லக்ஷணம்' என்பதனை வியாகரணம் என்ற பொருளில் முதன்முதல் வழங்கியுள்ளாரென்றும், இவருக்கு முற்பட்ட காத்தியாயனரும் தமது வார்த்திகத்தில் லக்ஷய லக்ஷனே வியாகரணம்' என இப்பொருளை ஒருவாறு குறிப்பித் 1. சொல் இலக்கியம் சூத்திரம் இலக்கணம் என்பது இதன் பொருளாகும். 2. ல கூடிணத்தைத் துணியும் வகையில் சொற்களேப் பகுப்போர் பின்பற்றுதற்குரியரல்லர். (ஆணுல்) சொல்லிலக்கணம் சொற்களேப் பகுப்போரால் பின்பற்றுதற்குரியதாம். 3. ‘இலக்கிய இலக்கணங்கள் கொண்டது. வியாகரணம்’ என்பது இதன் பொருளாகும்.