பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு } +5 புணர்ச்சிவிதி தென்னுட்டில் வழங்கிய அக்கொடியின் அடையா ளத்தைச் சுட்டுவதல்லது வடவேந்தர்க்குரிய வழக்கத்தினக் குறிப்பதன்ரும். குமரியாறு கடலாற்கொள்ளப்பட்டு அழிவதன்முன் அதன் தென்பகுதியிலே பஃறுளியாற்றுக்கும் குமரியாற்றுக்கும் நடுவே எழுநூற்றுக் காவதப் பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்தன வென்றும், அவற்றுள் குறும்பனேநாடு என்ற பெயரால் எழுவகைப்பட்ட நாடுகள் அமைந்திருந்தனவென்றும் அடியார்க்குநல்லார் கூறியுள்ளார். பனைகள் மிகுதியாக வளர் தற்கு இடனுதல் கருதி அந்நிலப்பகுதிகள் குறும்பனை நாடுகள் எனப் பண்டைச் சான்றேரால் பெயரிடப்பெற்றன என அறிகின் ருேம். குறும்பனே நாடுகளின் தொகுதியினைக் குறித்து வழங்கிய அடையாளமே பனைக்கொடியாகும். தம்காலத்தே தென்னுட்டில் அடையாளமாக வழங்கிய பனைக்கொடி யென்னுஞ் சொற் ருெடர்க்கே ஆசிரியர் தொல்காப்பியனர் புணர்ச்சிவிதி கூறின ரென்பது வெளிப்படையாதலின் ஆசிரியர் தொல்காப்பியஞர் ஆதியூழியின் அந்தத்தே இந்நூல் செய்தார் என்னும் நச்சிஞர்க் கினியர் கொள்கையில் ஒரு சிறிதும் தவறு காணுதற்கு இடமில்லை யென்க. தொல்காப்பியஞர் காலத்தில் தமிழ் நாட்டில் ஓடிய குமரியாறு, பிற்றை நாளிற் கடல்கோளால் அழிந்தபின்னரே இலங்கை தமிழ்நாட்டை விட்டுப் பிரிந்து தனித்தீவாக மாறியது. இலங்கைச் சரிதம் கூறும் மூன்று கடல்கோள்களுள் முதலாவது கடல்கோள் கி. மு 2387-ஆம் ஆண்டில் நிகழ்ந்ததென்பர்." எனவே குமரியாறு கடல்வாய்ப்பட்ட காலம் கி மு. 2387-ஆம் ஆண்டிற்கு முன்னென்பது துணியப்படும். இங்ங்னமாகவும் குமரியாறு கடல்கொண்ட காலம் கி.மு. 45-என மகாவித்துவான் அவர்கள் துணிதற்கு எத்தகைய தொடர்புமில்லையென்க. எண்வகை மெய்ப்பாடுகளையும் சுவையென்று தொகையிட்டு விரித்து விளக்கியவர் வட்மொழியில் நாட்டிய நூல் செய்த பரத 1. மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் பக்கம். 564-555.