பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 தொல்காப்பியம் பரத முனிவர் கூறிய வழிநிலை யவிநயங்கள் முப்பத்து மூன்றிற்கும் உடைமையின்புறல்' என்னுஞ் சூத்திரத்துத் தொல் காப்பியர் கூறிய உடைமை முதலிய முப்பத்திரண்டற்கும் தொடர்பு காட்டமுயன்ற அறிஞர் ரா. இராகவையங்காரவர்கள் தொல்காப்பியனர் கூற்றுக்கும் இளம்பூரணர் பேராசிரியர் ஆகிய உரையாசிரியர் கருத்துக்களுக்கும் முரண்படக் கூறியுள்ளார்கள். தொல்காப்பியனர் கூறிய நடுநிலையைத் த்ருதி என்றும் அருளலை விஷாதம் என்றும் வரைதலை அவகித்தம்' என்றும் அன்பினைச் சபலதை யென்றும் சூழ்ச்சியை "மதம் என்றும் அரற்றினைக் கிலானி யென்றும் உயிர்ப்பினை ஜடதை யென்றும் கையாற்றினை மரணம் என்றும் இடுக்கணச் சிரமம்' என்றும் பொச்சாப்பினை "அபஸ்மாரம் என்றும் இன்புறல் என்பதன்கண் உறல் என்பதனைத் தனியே ஒன்ருகக்கொண்டு அதனை 'வியோ தம் என்றும் கூறுதல் அவ்வம்மெய்ப்பாடுகளுக்கு வடமொழி யாசிரியர் கூறும் வரைவிலக்கணங்களோடு அறவே மாறுபட்ட தாகும். தொல்காப்பியனர் கூறிய வியர்த்தல் என்பதனேடொத்த வடமொழி மெய்ப்பாட்டின் பெயரை மகா வித்துவான் அவர்கள் சொல்லாது விட்டனர். பரத முனிவர் தம் நூற் கருத்து உலகு படைத்த பிரமன் முதலாக வருவதாக நூன்முகத்துக் கூறுதலின் அவரும் காந்தருவ வேதத்தை நோக்கி நூல் செய்தனரென்று துணியத்தகுமென்றும், இம்மெய்ப்பாடுகள் பரத முனிவராற் படைக்கப்பட்டனவென்று கொள்ளுதலும் பொருந்தாதென்றும் பரத முனிவர்க்குந் தொல்காப்பியனர்க்கும் பொதுவாக ஒரு முதனூலிருந்து அதன் கருத்துக்களையே அவ்விருவருங்கைக் கொண்டனரென்று துணிவதே பொருந்திற்ருகுமென்றும் மகா வித்துவான் அவர்கள் தம் முடியினைப் புலப்படுத்தியுள்ளார்கள்.” இசையொடு சிவணிய நரம்பின்மறை எனத் தொல்காப்பியனுர் கூறியது, இசைத்தமிழ் நூலாகிய யாழ்நூலேயே யென்பது இளம் 1. தமிழ் வரலாறு, பக்கம் 263-255. 2. தமிழ் வரலாறு. பக்கம் 262.