பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 தொல்காப்பியம் பாடங்கொண்டு 'நாடக வழக்கத்தாற் புலனெறிவழக்கஞ்செய்த முறைமையானேநெஞ்சு உணர்ந்துகொள்ளினன்றி உலகியல்வழக் கான் ஒருவர்க்கொருவர் கட்புலகைக்காட்டப்படாத பொருளைப் பொருளாகவுடைய எனப் பொருள் கூறியுள்ளார். நாட்டிய மரபின் என நச்சிர்ைக்கினியர், தாம்கொண்ட பாடத்திற்கு நாடக வழக்கத்தார் புலனெறி வழக்கஞ்செய்த முறைமையானே' எனப் பொருள் கொண்டமை இச்சூத்திரத்தில் தொல்காப்பியனர் அறிவு றுத்தக் கருதிய பொருளுக்கு ஏற்புடையதன்ரும். உண்மை மாத் திரமுணர்த்திப் பிழம்புணர்த்தப்படாத பொருள்களையே இச்சூத் திரத்தால் ஆசிரியர் விரித்துரைக்கின்ருர். இவை பெயரளவிற் பேசப்படுவனவாகவும் இன்ன உரு இன்ன நிறம் எனச் சுட்டிக் காட்டுதற்கேற்ற கட்புலனும் வடிவ மில்லாதனவாகவும் இருத்தல் பற்றி, இவற்றை நாட்டில் இயலும் வழக்குப் பயிற்சியின் துணை கொண்டு மனத்தால் உணர்ந்துகொள்ள வேண்டுமேயன்றி, இவ் வருவினது இஃதுஎனக் கட்புலகைச் சுட்டிக் காட்டுதல் இயலாது என்பதே இச்சூத்திரத்தின் கருத்தாகும். இப்பொருளிலேயே இறை யஞர் களவியலுரையாசிரியரும் இத்தொல்காப்பியச் சூத்திரத்தினை அன்பினேந்திணை யெனத் தொடங்கும் களவியல் முதற் சூத்திரவுரையில் மேற்கோளாக எடுத்தாள்கின்ருர். எனவே இச்சூத்திரத்திற்கு இளம்பூரணர் கூறிய பொருளே பண்டை யுரையாசிரியர்களால் ஏற்றுக்கொள்ளப்பெற்ற தொன்மையுடைய தென்பது நன்கு பெறப்படும். இனி நச்சினர்க்கினியர் கொண்ட பாடத்தில் வந்துள்ள நாட்டியம் என்பது தொல்காப்பியனர் காலச் சொல்லன்ரும். அச்சொல்லின் காலம் எதுவாயினும் நாட்டிய மரபினை இச் சூத்திரத்தில் ஆசிரியர் எடுத்தாளுதற்கு எத்தகைய தொடர்பு மில்லையென்க. அன்பாவது இதுவென அறியவிரும்பும் ஒருவன், அதன் இயல்பினைத் தாய் தந்தை முதலிய சுற்றத்தார்கண்ணும் 1. இறையனர் களவியல் முதற் குத்திரவுரை. ---- -