பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 12 i நண்புடையார்கண்ணும் உலகவாழ்க்கை நெறியாற் கண்டுணர்வ தல்லது நாட்டிய இலக்கணத்தைக் கற்று அதன் துணையானே மனத்தின்கண் உணர வேண்டுமென்னும் யாப்புறவில்லை. அன்றி யும் நாட்டிய முறையில்ை ஒப்பு, உறவு, கற்பு முதலியவற்றை ஒருவன் தெரிந்துகொள்ள முயல்வதென்பது அத்துணை எளிய செயலன்ரும். கருத்துப் பொருளைப் பற்றிய இவ்வாராய்ச்சியை உலகியல் வழக்கில் வைத்துணர்த்துவதே தொல்காப்பியனர் கருத்தாகும். எனவே இச்சூத்திரத்தால் நாட்டியநூல் முறையினைத் தொல்காப்பியனர் தம் நூலுக்கு ஆதாரமாகக் கொண்டா ரென்றல் பொருந்தாமை காண்க. வேட்கை யொருதலை எனத் தொடங்கும் சூத்திரத்தில் அவத்தையென்னும் சொல்லையோ அதன் மொழிபெயர்ப்பாகப் பிறிதொரு சொல்லையோ அவ்வவத்தைகள் பத்தென்னும் தொகையினையோ தொல்காப்பியனுர் குறிப்பிடவேயில்லை. அங்ங்ன மாகவும் பிற்காலத்தவராகிய உரையாசிரியர் இளம்பூரணர் தம் காலத்திற் பெருகி வழங்கிய வடநூற் கருத்தினுற் கவரப்பட்டுப் பத்தவத்தைகளும் இச்சூத்திரத்திற் கூறப்பட்டனவெனக் கொண்டு உரையெழுதியுள்ளார். இச்சூத்திரத்தில் களவொழுக்க மெனச் சிறப்பித்தற்குரியனவாக வேட்கை, ஒருதலையுள்ளுதல், மெலிதல், ஆக்கஞ்செப்பல், நாணு வரையிறத்தல். நோக்குவ வெல்லாம் அவையேபோறல், மறத்தல், மயக்கம், சாக்காடு என்னும் ஒன்பதுமே கூறப்பட்டுள்ளன. 'அஃதேல் அவை (அவத்தை பத்துளவன்றே, ஈண்டுரைத்தன ஒன்பதாலெனின், காட்சி விகற்பமுங் கூறினர், அஃதுட்படப் பத்தாம். காட்சி விகற்பமாகிய ஐயமுந் துணிவும் முதலது; வேட்கை இரண்டாவ தென்று கொள்க’ எனத் தாம் பததெனக் கொண்டதற்கு அமைதி கூறுவர் இளம்பூரணர். களவியல் தொடக்கத்தில் தொல்காப்பியர் கூறிய காட்சி, ஐயம், துணிவு என்னும் மூன்ற னுள் முதலாவதாகிய காட்சியை விடுத்து ஐயமுந்துணிவுமாகிய