பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 1?3 நிமித்தம் பன்னிரண்டென்ப' எனத் தொல்காப்பியனுர் சூத்திரஞ் செய்தனர். இச்சூத்திரத்திற்கு இதுவே பொருளென்பது இதற்கு முன்னும் பின்னுமுள்ள சூத்திரங்களை ஒப்புநோக்கி ஆராய் வார்க்கு இனிது விளங்கும். தொல்காப்பியப் பொருளதிகாரத் திறுதியிற் சொல்லப்பட்ட முப்பித்திரண்டு உத்திகளிற் பெரும்பாலான கெளடலியர் கூறிய முப்பத்திரண்டு உத்திகளோடு ஒத்துக் காணப்படுகின்றனவென் றும், கெளடலியர் அவ்வுத்திகளே நூற்கிறுதியில் வைத்திருத்தல் போலத் தொல்காப்பியனரும் இவ்வுத்திகளே நூலிறுதியில் வைத் துள்ளாரென்றும் இவ்விருவர்க்கும் ஒத்த முதனூல் இஃதென்று இன்னுந் துணிதற்கில்லையென்றும் ஐந்திர நிறைந்த தொல் காப்பியன் எனப் பாயிரங் கூறுதலால் அவ்வைந்திரத்தேனும் அன்றி அதன் வழித்தாகிய பிறிதொரு நூலிலேனும் இவ்வுத்திகள் உள்ளனவோ என்று நினைக்கப்படுமென்றும் அறிஞர் ரா, இராக வையங்காரவர்கள் ஐயுறுவர். பொருளதிகாரத்தின் இறுதியிற் சொல்லப்பட்ட முப்பத்திரண்டுத்திகளும் கெளடலியரியற்றிய அர்த்தசாத்திரத்திலுள்ளனவே யென்றும் கெளடலியரது காலம் கி. பி. மூன்ரும் நூற்ருண்டென்றும் ஆகவே தொல்காப்பியஞர் கி.பி மூன்ரும் நூற்ருண்டிற்குப் பிற்பட்டவரென்றும் அறிஞர் வையாபுரிப் பிள்ளையவர்கள் துணிந்து கூறியுள்ளார்கள்.” தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் இறுதிப் பகுதியாகிய மரபியல் பிற்காலத்திற் பல மாற்றங்களைப் பெற்றுளதென்பது முன்னர் விளக்கப்பட்டது. இம்மரபியலிற் சொல்லப்படுகின்ற முப்பத்திரண்டு உத்திகளுக்கும் அர்த்தசாத்திரத்திலுள்ள முப்பத் திரண்டு உத்திகளுக்கும் சொல்வகையாலும் கருத்துவகையா லும் வேறுபாடுகள் உள. மகாவித்துவான் ரா. இராகவையங்கா ரவர்கள் தொல்காப்பியத்திலுள்ளவற்றிற்கும் அர்த்தசாத்திரத்தி 1. தமிழ் வரலாறு பக்கம் 318. 2. தமிழ்ச் சுடர்மணிகள். பக்கம் 36.