பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு i25 பியர் கி.பி. 4 அல்லது 5-ஆம் நூற்ருண்டில் வாழ்ந்தவரெனக் கொள்ளுதலே பொருந்துமென்றும் அறிஞர் வையாபுரிப் பிள்ளை யவர்கள் முடித்துக் கூறியுள்ளார்கள்." ஒரை யென்னும் சொல், விளையாட்டு என்னும் பொருளில் வழங்கும் தனித் தமிழ்ச் சொல்லாகும். கோதையாயமொடு ஒரைதழிஇ (அகம்-49) எனவும், ஒரையாயம் (அகம்-219), {குறுந்-48) எனவும், ஒரை மகளிர் (குறுந்-40i) எனவும், ஒரை யாயத் தொண்டொடி மகளிர் (புறம்-176) எனவும், விளையாடா யத்து ஓரையாடாது' (நற்றிணை-2) எனவும் ஒரையென்னுஞ் சொல் விளையாட்டு என்னும் பொருளிற் பயின்று வழங்கியுளது. மேலெடுத்துக்காட்டிய களவியற் சூத்திரத்தில் வந்துள்ள ஒரை யென்னுஞ் சொல்லும் விளையாட்டு என்னும் பொருளிலேயே ஆசிரியரால் ஆளப்படுகின்றது. விளையாட்டென்னும் பொருளின தாகிய ஒரை என்னும் இத்தமிழ்ச் சொல்லுக்குப் பிற்காலத்த வராகிய உரையாசிரியர்கள் முகூர்த்தமெனப்பிறழ உரை கூறி யுள்ளார்கள். ஒரையென்னும் பழந்தமிழ்ச் சொல்லுக்குரிய பொருள் இதுவெனவுணராத ஆராய்ச்சியாளர் சிலர், ஹோரா என்ற யவன மொழியே வடமொழி வழியாகத் தமிழிற்புகுந்து ஒரையெனத் திரிந்ததெனப் பிழைபடக் கருதியதோடன்றி. அக் கருத்தினை யடிப்படையாகக்கொண்டு ஒரையென்னுஞ் சொல்லை வழங்கிய தொல்காப்பியம் பிற்காலத்து நூலே என மற்ருெரு பிழைபட்ட முடியினையும் வெளியிடுவாராயினர், அன்னேரது பிழை கொள்கைக்குரிய சான்றென எடுத்துக்கொண்டமை ஏற்புடைய தன்ரும். ‘பூப்பின் புறப்பாடீராறு நாளும் நீத்தகன்றுறையார் என் மனர் புலவர் என்ற தொல்காப்பியச் சூத்திரத்தின் கருத்து மனு தர்ம சாத்திரத்திற் காணப்படுகின்றதென்றும், இந்த ஸ்மிருதியின் 1. தமிழ்ச் சுடர்மணிகள். பக்கம் 39.