பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#26 தொல்காப்பியம் காலத்திற்குப் பின்னெல்லை கி.பி. 200-என ஆசிரியர் P.V. Kane கூறுவரென்றும், எனவே தொல்காப்பியனர் காலம் கி. பி. 200-க்குப் பிற்பட்டதென்றும் பிள்ளையவர்கள் கூறியுள்ளார்கள்." வாழ்க்கைக்கு இன்றியமையாத செயல்முறை விதிகள் சில, எந்த நாட்டிற்கும் எந்தக் காலத்திற்கும் பொதுவாக ஒத்து வழங்குதல் இயல்பு. இப்பொதுவியல்பினையுணராது ஒரு நாட்டவர் கருத்தையொட்டியே ஏனை நாட்டவரும் செயல் மேற்கொண்டன ரெனத் துணிதல் பொருந்தாது. ஆரியர்கள் தென்னுட்டிற் குடிபுகுந்து நிலைப்பதன் முன் இயற்றப்பட்டது தொல்காப்பியம். அவர்கள் தென்னுட்டவருடன் மிகவும் நெருங்கிப் பழகநேர்ந்த பிற்காலத்தில் தம் நாகரிகத்தினைப் பரப்புங் கருத்துடன் இயற்றி யவை மிருதி நூல்கள். பழந் தமிழ் நூலாகிய தொல்காப்பியத் திற்கும் பிற்காலத்தனவாகிய இம்மிருதி நூல்களுக்கும் எள்ளளவுந் தொடர்பில்லையென்க. இதுகாறும் கூறியவற்ருல் தொல்காப்பியனர் பாணி னிக்குக் காலத்தாற் பிற்பட்டவரல்லர் என்பதும், பாரத காலத்துக்கு முற்பட்டவர் என்னும் நச்சிஞர்க்கினியர் முதலிய தொல்லாசிரியர் கொள்கையே வலியுறுமென்பதும், மாபாரத காலம் கி. மு. ஆயிரத்தைந்நூருண்டுகளுக்குமுன் என்பது ஆராய்ச்சியாளர் துணியாதலால் அக்காலத்திற்குமுன் வாழ்ந்த ஆசிரியர் தொல்காப்பியனர் கி. மு. ஆயிரத்தைந்நூருண்டு களுக்குப் பிற்பட்டவராதல் இயலாதென்பதும், களவியலுரையிற் கண்ட ஆண்டுக் கணக்கின்படி நோக்குங்கால் இடைச்சங்கம் கி.மு. 5320-இல் தொடங்கப்பெற்றமை புலனுதலின் தலைச் சங்கத்திறுதியிலும் இடைச்சங்கத் தொடக்கத்திலும் வாழ்ந்த வராகிய தொல்காப்பியனர் காலமும் அதுவேயென்பதும் நன்கு துணியப்படுமென்க. 1. தமிழ்ச் சுடர்மணிகள். பக்கம் 36,