பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு #27 தொல்காப்பியனுர் சமயம் மக்களால் மதிக்கத்தகும் பொருள்களெல்லாவற்றையும் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என மூன்று திறமாகப் பண்டைத் தமிழாசிரியர் பகுத்து ஆராய்ந்தனர். உயிர் வாழ்க்கைக்கு அடிப்படையாயமைந்தன நிலமும் காலமும் ஆதலின் அவை முதற்பொருள் என வழங்கப்பட்டன. புல் முதல் மக்களிருகிய உயிர்ப்பொருள்களும் உயிரல் பொருள்களும், நிலமுங் காலமுமாகிய முதற்பொருளின் சார்பாகக் கருக்கொண்டு தோற்றுவனதாதலின் கருப்பொருள் என வழங்கப்பட்டன. மக்களுக்குரிய அகமும் புறமுமாகிய ஒழுகலாறுகள் உரிப்பொருள் எனப்படும். மக்கள் வாழும் நிலத்திற்கும் காலத்திற்கும் ஏற்ப அவர்களுடைய உள்ளத்துணர்ச்சிகளும் செயல் முறைகளும் உருப்பெறுவனவாம் இந்நுட்பத்தினைத் தொல்காப்பியனுர்க்கு முற்பட்ட தமிழ்ச்சான்ருேர் நன்குணர்ந்து வெளியிட்டுள்ளார்கள். மக்கள் வாழும் நிலத்தியல்புக்கு ஏற்ப அவர்தம் மனத்தியல்வாகிய தெய்வங் கொள்கையும் வழிபாட்டு முறைகளுந்தோன்றி நிலை பெறுவனவாதலின் தெய்வங்கொள்கையினையும் கருப்பொருள் களுள் ஒன்ருகவே பண்டைத் தமிழாசிரியர் வகுத்துரைப் பாராயினர். "தெய்வம் உணுவே மாமரம் புள்பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவுங் கருவென மொழிய” எனவரும் நூற்பாவில்ை தெய்வங் கொள்கையினைக் கருப் பொருள்களுள் முதலாவதாக வைத்தெண்ணிய தம் முன்னேர் கொள்கையினே ஆசிரியர் தொல்காப்பியனர் அறியுறுத்துதல் 岳町鼠瑄、 காடுறையுலகமாகிய முல்லை நிலத்தில் மாயோன் வழிபாடும், மைவரையுலகமாகிய குறிஞ்சி நிலத்தில் சேயோன் வழிபாடும்,