பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 13? வழக்கேயென்பதும் இக்குறளால் நன்கு புலனுதல் காண்க இங்ங்ணம் மன்னனைக் கடவுளாக மதித்துப் போற்றும் வழக்கம் தொல்காப்பியனர் காலத்திலேயே தமிழகத்தில் நிலைபெற்று வழங்கிய தொன்மையுடையதாகும். மக்களாற் செய்யப்படும் உழவுக்கும் பிற தொழிலுக்கும் காவல் செய்யுங் கருத்தினுல் நாளடைவில் உருவாகி நிலைபெற்ற குடும்பமே மன்னர் குடும்பமாகும். மன்னன் என்னும் பெயர் நிலை பெறுதல் என்னும் பொருளுடைய 'மன் என்னும் உரிச்சொல்லின் அடியாகப் பிறந்த காரணப்பெயராகும். மக்களது நல்வாழ்வு நிலைபெற அவர்கள் வாழும் நாட்டை நிலைபெறக் காக்குங் கடமை பூண்ட ஆட்சித் தலைவன், மன்னன் என நன்குமதித்துப் போற்றப் பெறுவாயிைனன். அதனல் அவனது குடும்பமும் நாட்டில் வழிவழியாக நிலைப்பெற்று வருவதாயிற்று. உடம்பை வளர்ப்பனவாகிய நெல் முதலிய உணவுப் பொருள்களோ அவை விளைதற்கு உறுதுணையாகிய நீரோ இவ்வுலகில் உயிர் வாழ்வின்ை நிலைபெறச் செய்யும் ஆற்றலுடையனவாகா. மக்களை ஒரு நெறிப் படுத்தித் தம்முள் வேற்றுமையின்றி அன்பினுற் கலந்து வாழ வழி வகுக்கும் ஆட்சித் திறனுடைய மன்னனே மலர்தலையுலகிற்கு உயிராவான் எனத் தமிழ் முன்னேர் எண்ணினர்கள். அவர்கள் எண்ணியவண்ணமே அக்காலத்தமிழ் .ே வ ந் த ர் க ளு ம் தம் நாட்டு மக்களின் இன்னுயிரென இன்றியமையாதவராய் முறை பிறழாது ஆட்சி புரிந்தனர். நாகரிகம் உருப்பெறுதற்கிடகிைய மருதநில மக்கள் தம் நாட்டு வேந்தனையே தெய்வமென மதித்துப் போற்றி அவனது ஆணைவழி ஒழுகினமையால் வேந்தன் மேய தீம்புனலுலகம்' என்ற தொடரால் மருதநிலத்துக்குத் தெய்வ மாவான் வேந்தனே எனத் தொல்காப்பியனர் குறிப்பிடுவாரா யினர். வேந்தனைக் காத்தற் கடவுளாகிய திருமாலாகக் கதிருப் போற்றும் மரபு தொல்காப்பியனர் காலத்திலேயே நிலைபெற்று வழங்கியுளது. இவ்வழி பாட்டு முறையினை,