பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் "மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பிற் ருவா விழுப்புகழ்ப் பூவைநிலை" என்ற தொடரால் தொல்காப்பியனுர் உய்த்துணர வைத்தமை இவண் கருதற்குரியதாகும். ஆனிரையைக்காத்த மாயவன் திருவுருவோடு உவமித்துக் காட்டிடத்து அலரும் காயாம்பூவைப் புகழ்வது பூவைநிலையென்னுந் துறையாகும். இத்துறையின் இயல்பினை, "கறவை காவலன் நிறளுெடு பொரீஇப் புறவலர் பூவைப் பூப்புகழ்ந் தன்று' எனவருத் தொடரால் ஐயனுரிதர்ை இனிது விளக்கினர். "மாயோன்மேய மன்பெருஞ் சிறப்பின் தாவா விழுப்புகழ்ப் பூவை நிலை எனவருந் தொல்காப்பியத் தொடர்க்கு மாயோனைப் பொருந்திய நிலைபெற்ற பெருஞ் சிறப்பினையுடைய கெடாத விழுப் புகழைப் பொருந்திய பூவைநிலையைக் கூறுதல் எனப்பொருள் கூறி, பூவை (காயாம்பூ) மலர்ச்சியைக்கண்டு மாயோன் நிறத்தை யொத்ததெனப் புகழ்தல். நாடெல்லை காடாதலின், அக் காட்டிடைச் செல்வோர் அப்பூவையைக்கண்டு கூறுதல். உன்னங் கண்டு கூறிற்ைபோல இதுவும் ஓர் வழக்கு என விளக்கமுங் கூறிய இளம்பூரண அடிகள், இஃது உரையன்றென்பார் மாயோன் முதலாகிய தேவர்களோடு உவமித்தலே பூவைநிலை யென்ப' என மற்ருெரு சாரார் கருத்தினையும் எடுத்துக்காட்டி வேறு கடவுளரை நோக்கி உவமித்து வருபவையெல்லாம் பூவைநிலையாகக் கொள்க என்னை? "ஏற்றுர்தி யானும் இகல்வெம்போர் வானவனும் ஆற்றலும் ஆள்வினையும் ஒத்தொன்றி ைெவ்வாரே கூற்றக் கணிச்சியான் கண்முன் றிரண்டேயாம் ஆற்றல்சால் வானவன் கண்”