பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 133 என முத்தொள்ளாயிரத்து வந்தவாறு காண்க என்று தம் கொள்கையையும் எடுத்துரைத்துள்ளார். இளம்பூரணருரையினை யுளங்கொண்ட நச்சினர்க்கினியர், மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பிற் ருவா விழுப்புகழ்ப் பூவை நிலை யென்னுந் தொடரை "மாயோன் விழுப்புகழ், மேய பெருஞ்சிறப்பின் தாவா விழுப்புகழ் மன்பூவைநிலை எனக் கொண்டு கூட்டி மாயவனுடைய காத்தற் புகழையும் ஏளுேர்க்கும் உரியவாய் மேவிய பெரிய தலைமையிற் கெடாத படைத்தல் அழித்தல் என்னும் புகழ்களையும் மன்னர் தொழிலுக்கு உவமையாகக் கூறும் பூவைநிலை என உரை கூறித் தமது கருத்துக்கு ஆதரவாக ஏற்றுவலனுயரிய எனத் தொடங் கும் 56-ஆம் புறப்பாடலை உதாரணமாகக் காட்டியுள்ளார். காட்டிடத்து அலருங் காயாம்பூ, நீலமேனி நெடியோளுகிய மாயோனது திருமேனியினை நினைவுபடுத்துவதாகலின், பூவை யாகிய அப்பூவினைப் புகழ்தல் மாயோனைப் புகழ்தலாய் அப்பெரு மானது காத்தற்ருெழிலைத் தனக்குரிய கடமையாகக்கொண்ட மன்னனது பெருஞ்சிறப்பினை விரித்துரைக்குந் துறையாயிற்று. மாயோளுகிய தெய்வத்தோடு மன்னனை யுவமித்தலே பூவைநிலை யென்பது ஆசிரியர் தொல்காப்பியரைது கருத்தாகும். அவர்க் குப்பின் தோன்றிய கடைச்சங்கத் தொகை நூல்களில் முக் கண்ணுன் முருகன் முதலிய எல்லாத் தெய்வங்களையும் மன்னனுக்கு உவமையாக எடுத்துரைத்துச் சிறப்பிக்கும் வழக்க முண்மையை யறிந்த இளம்பூரணரும் நச்சிளுர்க்கினியரும் மாயோனை மன்ன னுக்கு உவமித்தலேயன்றி ஏனைத் தெய்வங்களே அவனுக்கு உவமித்தலும் பூவைநிலையேயாம் என இலக்கியங் கண்டதற்கேற்ப இலக்கணமும் அமைத்துக்கொண்டார்கள். இச்செய்தி "மாயோ னிறம்போலும் பூவைப்பூநிறமென்று பொருவுதல் பூவைநிலை யென்ருல் ஏனையோர் நிறத்தொடு பொருந்தும் பூக்களையும் பொருவுதல் கூறல்வேண்டும். ஆசிரியர் அவை கூருமையின் அது புலனெறி வழக்க மன்மையுணர்க' என நச்சினர்க்கினியர், ஐயனரிதர்ை கொள்கையினை மறுத்துரைத் தலால் நன்குபுலனும்,