பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#38 தொல்காப்பியம் ரால் ஊழ்வினையாவது இதுவென விளக்கியுள்ளார். இத் தொடரில் வகுத்தான் என்னும் சொல் இறைவனைக் குறிப்ப தாகும். வகுத்தவகை யென்றது அவ்விறைவல்ை வகுக்கம் பட்ட நியதியாகிய ஊழினைக் குறிப்பதாகும். பகுத்தது பால் என வழங்கிற்ைபோல வகுத்தது வகையென்ருயிற்று. தெய்வத்தின் இயல்பினை விரித்துரைக்கக் கருதிய தொல் காப்பியனுர், பால்வரை தெய்வம் என்ற தொடரால் தெய்வத் தைக் குறிப்பிட்டார். அவ்வாசிரியர் கருத்தின்படி ஊழின் இயல் பினை விளக்கக் கருதிய திருவள்ளுவர், 'வகுத்தான் வகுத்த வகை' என அதனை விரித்துரைத்தார். ஆகவே பால்வரை தெய்வம் எனத் தொல்காப்பியர்ை கூறியதும், வகுத்தான் எனத் திரு வள்ளுவர் கூறியதும் இறைவனையே யென்பது இனிது புலளுதல் காண்க. ஒருயிர் செய்த வினையின்பயன் பிறிதோருயிரின்கட் செல்லாமல் செய்தவுயிரையே வினை சென்று சேரும்படி வகுத்து நுகர்வித்தல் இறைவனது இயல்பாதலின் வகுத்தான் என்ற பெயரால் கடவுளைக் குறித்தார். ஈண்டு வகையென்றது கடவுளால் வகுக்கப்பட்ட வினைப்பயணுகிய ஊழின. விழைவு, அறிவு, தொழில் என்னும் மூவகையாற்றலும் விளங்கப்பெற்று உலக நுகர்ச்சியிற் செல்லும் உயிர்கள், இன்ப நுகர்ச்சியில் விருப்பும், துன்ப நுகர்ச்சியில் வெறுப்பும் உடைமையால் பிறிதோருயிரால் ஈட்டப்படும் நல்வினைப் பயன் களைத் தாம் கவர்ந்து கொள்ளவும் தாம்செய்த தீவினைப் பயன்கள் தம்மைப்பற்றி வருத்தாதபடி விலகியொழுகவும் முயலுதலே இவ் 1. திருவள்ளுவர் ஊழைப்பற்றிக் கூறிய இக்கருத்தின. "யாழின் மொழி மங்கை பங்கன் சிற்றம்பலத்தா ன மைத்த ஊழின் வலியத்ொன் றென்னே?” (திருக்கோவையார்.350, என வருந் தொடரால் மணிவாசகப் பெருமான் விளக்கினமை காண்க.