பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 139 வுலகியலிற் காண்கின்ருேம். இங்ங்ணம் ஒருவர்செய்த நல்வினைப் பயனுகிய இன்பத்தை மற்றெருவர் கவராதபடியும் தாம் நுகர் தற்குரிய தீவினைப்பயனகிய துன்பத்தை நெகிழவிட்டு ஓடாத படியும் அவரவர்களால் ஈட்டப்படும் வினைப்பயன்களை அவரவரே நுகருமாறு அரசன் ஆணைபோல் வரையறுத்துச் செலுத்துவது இறைவனது ஆணையாகும். இறைவனது ஆற்றலாகிய ஆண, அவ்வவ்வுயிர்களின் இருவினைப் பயன்களை முன்னிட்டு அவ்வச் செயல்களைச் செய்வதாகலின், ஊழினைக் கருவியாகக்கொண்டு செயல்புரியும் இறைவனது ஆற்றலப் பாலது ஆண என்ருள் தொல்காப்பியர்ை. பால் ஊழ் வகை நியதி விதியென்பன ஒரு பொருட்கிளவி, ஒருபாற் கோடாது நடுநின்று செங்கோல் செலுத்தும் அரசனது ஆணே இல்வழி எளியோர் பொருளே வலியோர் கவர்ந்து கொள்வர். அதுபோல எல்லாப் பொருளையும் வகுத்து இயக்குபவனகிய முதல்வனது ஆணையாகிய முறை நிகழாக்கால் ஒருவர் செய்த வினைப்பயனை மற்ருெருவர் கவர் வதாய் முடியும். இருவினையும் உணர்வற்றனவாதலின் அவை போகத்தைப் பயத்தல் மாத்திரையேயன்றி அப்போகம் வினை செய்தானைச் சென்றடையுமாறு செய்விக்கும் ஆற்றலுடையன வல்ல. எனவே உயிர்களுக்கு இருவினப்பயன் இறைவனது ஆணையினுல் வருமென்பதே பொருந்துவதாகும். வேந்தன் தன் ஆணயை எனய அதிகாரிகள்மாட்டு வைத்து அவர்களைக் கொண்டு. அவ்வத்தொழில் செய்விக்குமாறுபோல, இறைவனும் தன் ஆணையை இருவினையின்மாட்டு வைத்து அவற்றைக் கொண்டு வினைப்பயன்களே நுகர்விப்பன். இக்கருத்தின யுளத்துட் கொண்டே பால்வரை தெய்வம் என்ற தொடரால் தொல் காப்பியர் இறைவனக் குறிப்பிடுவாராயினர். உழவர் செய்யுந் தொழிலுக்குத்தக்க பயனை விளைநிலம் விளைவிப்பதன்றி அவ்வுழவு தொழில் தானே விளைவிக்கமாட்டாது. அதுபோலவே உணவும் வித்தும்ாகத் தொன்றுதொட்டு வரும் வினைப்பயன்களை உயிர் கட்குக் கூட்டுவிப்பவன். இறைவனேயன்றி வினை தானே கூட்டு