பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 翼影 தோடு வழிவழியாகச் சிறந்து பொலிமின் என வாழ்த்துதலால் இது புறநிலை வாழ்த்தாயிற்று. இவ்வாழ்த்தியல் கலிப்பாவகை யினும் வஞ்சிப்பாவினும் வரப்பெருது இவையொழிந்த பாவினுள் வருமென்பதனை, "வழிபடு தெய்வ நிற்புறங் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே கலிநிலை வகையும் வஞ்சியும் பெரு” என்பதல்ை தொல்காப்பியனர் வரையறுத்துள்ளார். எனவே இப் புறநிலைவாழ்த்துப் பொருண்மை வெண்பாவினும் ஆசிரியப் பாவினும் இவையிரண்டும் புணர்ந்த மருட்யாவினும் தொல் காப்பியனர் காலத்துப் பாடப்பெற்றதென்பது பெறப்படும். இச்சூத்திரத்தில் நிற்புறங்காப்ப என வாழ்த்தப் பெறுவோனே ஒருமையாற்கூறி, வாழ்த்தியல் முடியில் 'பொலிமின் எனப் பன்மையாற்கூறியதன் நோக்கம், வாழ்த்தப் பெறுவோன அவன் மனைவி மக்கள் முதலிய சுற்றத்தாரோடுங்கூட்டி நீடுவாழ்மின் என வாழ்த்திப் பாடுதல்வேண்டும் என்னும் புலமை நெறியினை அறிவுறுத்தற் பொருட்டாம். புறநிலை வாழ்த்தின் இயல்புரைக்கு முகமாகக் கடவுள் வழிபாட்டால் உளவாகும் நற்பயன்களை ஆசிரியர் தொல்காப்பியனர் அறிவுறுத்தினராயிற்று. தெய்வத்திற்குத் திருவுருவமைத்து முன்னின்று பரவி வழி படும் முறையினையும், அங்ங்ணம் பரவிப் போற்றுதற்குரிய செய் யுன் ஒத்தாழிசைக் கலிவகையுள் ஒன்ருக அடங்குமென்பதனையும், அதுதான் வண்ணகமெனவும் ஒருபோகெனவும் இருவகைப்படு மென்பதனையும், "ஏனேயொன்றே தேவர்ப் பராஅய முன்னிலைக் கண்னே" எனவும்,