பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 தொல்காப்பியம் "புல்லும் மரனும் ஒரறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே' 'நந்தும் முரளும் ஈரறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே' 'சிதலும் எறும்பும் மூவறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே' 'நண்டும் தும்பியும் நான்கறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே' 'மாவும் புள்ளும் ஐயறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே' 'மக்கள் தாமே ஆறறி வுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே' எனவரும் மரபியற் சூத்திரங்களால் தொல்காப்பியனுர் விரித் துரைத்துள்ளார்; இங்ங்ணம் பகுத்துரைக்கப்படும் எல்லாவுயிர் களுக்கும் இன்பத்தின் பால் வேட்கை நிகழும். இவ்வுண்மையினை "எல்லாவுயிர்க்கும் இன்பமென்பது, தான் அமர்ந்து வருஉ மேவற்ருகும் எனவருஞ் சூத்திரத்தாற் குறிப்பிட்டுள்ளார். இதனுல் மக்களே ஒருவனும் ஒருத்தியுமாய் இன்ப நுகர்ந்தாரெனப்படாது. அவ்வின்பம் எல்லாவுயிர்க்கும் பொதுவென்பது உம் அவை ஆண் பெண் இருபாலாய்ப் புணர்ந்து இன்புறுமென்பது உம் கூறினரா யிற்று. உயிர் வேறு உடம்பு வேறு என்பதனைக் காலம் உலகம் உயிரே உடம்பே' எனவும் உடம்பும் உயிரும் வாடியக் காலும்' எனவும் வருந் தொடர்களாலும், உயிர் தான் நின்ற உடம்பினை விட்டுப் பிரிந்து செல்லுமியல்பின தென்பதனைச் சென்றவுயிரின் நின்ற யாக்கை எனவருந் தொடராலும், உடம்பினின்றும் உயிரைப் பிரிப்பதொரு தெய்வ ஆற்றல் உண்டென்பதும் அதனை மாற்றும் ஆற்றல் உயிர்கட்கு இல்லையென்பதும் ஆகியவுண்மை