பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு #4% யினை மாற்றருங் கூற்றஞ்சாற்றிய பெருமை என்ற தொடராலும், இவ்வுலகிற் பலரும் மாய்ந்தொழியத் தான்மட்டும் மறையாது நின்று யாக்கை நிலையாமையை விளக்கும் அடையாளமாக எஞ்சி நிற்பது புறங்காடு மட்டுமே என்பதனை 'மலர்தலை யுலகத்து மரபு நன்கறியப் பலர்செலச் செல்லாக் காடுவாழ்த்து என வருந் துறைப்பொருளாலும் தொல்காப்பியனர் தெளிவுபடுத்தி யுள்ளார். இவ்வாறே மன்னப் பொருட் பிணி' என்பதளுல் செல்வ நிலையாமையையும், நாளது சின்மை என்பதளுல் யாக்கை நிலையாமையையும், இளமைய தருமை என்பதளுல் இளமை நிலையாமையையும் ஆசிரியர் அறிவுறுத்தினமை உணர் தற்குரியதாம். இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வ நிலையாமை எனப் பல்லாற்ருனும் இவ்வுலகம் நிலையாதென்பதனை நன்குணர்ந்தவர் இவ்வுலகியல் வாழ்வினை நிலையற்றதெனக் கருதி விலகியொழுகுதல் கூடாதென்பதும், இவ்வாறு ஒருநிலை யில் நில்லாத இவ்வுலகியற் கூறுகளைப் பற்றுக்கோடாகப் பற்றி நின்றே உயிர்க்குறுதி பயக்கும் நிலையுடைய நற்பொருள்களைத் தேடிக்கொள்ளுதல் வேண்டுமென்பதும், உலகியல் வாழ்வில் நேரும் பலவகைத் தடைகளே எதிர்த்து நின்று, நில்லாதவற்ருல் நிலையுடையனவற்றை யெய்துதலே காஞ்சித்திணையாகிய ஒழுகலா றென்பதும் தொல்காப்பியர்ை கொள்கையாகும். " காஞ்சிதானே பெருந்திணைப்புறனே பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற்ருனும் நில்லாவுலகம் புல்லிய நெறித்தே" எனவருங் காஞ்சித்திணைச் சூத்திரத்தால் தொல்காப்பியனர் கொள்கை இனிது புலளுதல் காண்க. எதிருன்றல் காஞ்சி என்னும் பன்னிருபடல நூலாசிரியர் கொள்கையும் இவ்வாசிரியரது கருத்தினை யடியொற்றியதேயாகும்.