பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு {55 தொல்காப்பியனர் கூறியதனையே திருவள்ளுவரும் செம்பொருள் என வழங்கினரென்பதற்குப் பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ் செம்பொருள் காண்பதறிவு என்புழிச் சிறப் பென்னும் செம்பொருள் என அடைபுணர்த்தோதியதே சான்ருத லறிக. சிறந்தது எனச் சான்ருேராற் போற்றியுரைக்கப்படும் முழுமுதற் பொருள் என்பது மேற்காட்டிய தொடரின் பொருளா கும். இல்லற வாழ்வில் நுகரவேண்டிய இன்பங்களை யெல்லாம் எஞ்சாது நுகர்ந்து உள்ளத்தமைதியுற்ற நன்மக்கள் என்றும் அழியாத பேரின்பப் பொருளாய்ச் சிறந்து விளங்குஞ் செம் பொருளே இடைவிடாது சிந்தித்து மீண்டும் பிறவிச் சூழலிற்றிரும்பி வாராமைக்கு ஏதுவாகிய நன்னெறியினைத் தலைப்படுதலே அன்பினைந்திணை யொழுகலாற்றின் முடிந்த பயனும் என்பது தமிழ் முன்னேர் கொள்கையாகும். ' கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி' ஒர்த்துள்ள முள்ள துணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு ”

  • பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்

செம்பொருள் காண்ப தறிவு” எனவருந் திருவள்ளுவர் வாய்மொழிகள் தொல்காப்பியஞர் கூறியவாறு சிறந்தது பயிற்றும் இயல்பினை விரித்துரைப்பனவாம். அன்பினுல் மனையறம் நிகழ்த்தி வாழ்ந்தவர்கள் மெய் யுணர்ந்து வீடுபெறுங் கருத்துடையராய் இவ்வுலகியற் பற்றினை விட்டொழித்து எல்லாவுயிர்களிடத்தும் இரக்கமுடையராய்த் துறவற நெறியாகிய அருள் வாழ்வினை மேற்கொள்வர். இதனை 'அருளொடு புணர்ந்த அகற்சி என்பர் ஆசிரியர். இத்தகைய அருள் வாழ்வினை விரும்பி வேந்தர்களும் தங்கள் அரச பதவி