பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 தொல்காப்பியம் யினைத் துறத்தலுண்டு. அங்ங்ணம் அரசு துறக்குமியல்பினைக் கட்டில் நீத்த பால் எனத் தொல்காப்பியம் கூறும். இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என்னும் வேந்தர் பெரு மான் தன் அரச பதவியினைத் துறந்து காடுபோந்த வரலாறு பதிற் றுப் பத்தின் முன்ரும் பத்தின் பதிகத்திற் குறிப்பிடப்பட்டுள்ளமை இவண் ஒப்பு நோக்கத் தகுவதாம். நீராடல், நிலத்திடைக் கிடத்தல், தோலுடுத்தல், சடைபுனைதல், எரியோம்பல், காட்டி லுள்ள உணவுகோடல், கடவுள் வழிபாடு, விருந்தோம்பல் எனத் தவஞ் செய்வோர்க்குரிய இயல்புகள் எட்டு வகையாகச் சொல்லப்பட்டன. இவற்றை நாலிரு வழக்கிற் ருயதப்பக்கம் என்பர் தொல்காப்பியர். தெய்வம் அவ்வந் நிலத்துக் கருப்பொருள்களுளொன்ருகக் கூறப்படினும் எல்லாப் பொருள்களினும் மிக்கது தெய்வம் என்னும் மெய்ம்மையினைப் பண்டைத் தமிழ்ச் சான்ருேர் மறந் திலர். கருப்பொருள்பற்றிய நிகழ்ச்சி பிறிதொன்றற்கு உவமை யாக உய்த்துணரவைத்தல் உள்ளுறையுவமமெனப்படும். யான் புலப்படக் கூறுகின்ற கருப்பொருள் நிகழ்ச்சியுடன் புலப்படக் கூருத பொருளும் ஒத்துப் புலப்படுவதாக எனக் கருதிய புலவன் தன் கருத்துப் படிப்போர்க்குப் புலகுைம் வண்ணம் உணர்த்துதற் குறுப்பாகிய சொல்லமையத் தான் பாடிய செய்யுளில் உய்த்துணர வைப்பது உள்ளுறையுவமையின் சிறப்பியல்பாகும். கருப்பொருள் களே நிலைக்களஞகக் கொண்டு இவ்வுவமை பிறக்குங்கால் அவற்றின்பால் அமைந்த நலந்தீங்குகளாகிய செயல்களே உள்ளுறையாற் புலப்படுத்தக் கருதிய நிகழ்ச்சிகளுக்கு ஒப்புமை கூறும் நிலையுண்டாகும். கருப்பொருளிலொன்ருகிய தெய்வத்தின் இயல்பினை உவமையாக எடுத்துரைப்பின் மக்களால் வழிபடப் பெறும் தெய்வத்தின் மாண்புகள் இவ்வொப்புமை வாயிலாகச் சிதைவுறுதல்கூடும். இந்நுட்பத்தினை நன்குணர்ந்த சான்ருேள். தெய்வத்தை நிலனுகவைத்து உள்ளுறை கூறுதல் கூடா