பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 157 தென்றும், தெய்வமொழிந்த ஏனைய கருப்பொருளையிடகைக் கொண்டே உள்ளுறை யுவமையினைக் கூறுதல் வேண்டுமென்றும் வரையறை செய்தார்கள், இவ்வரையறையினை, 'உள்ளுறை தெய்வ மொழிந்ததை நிலனெனக் கொள்ளு மென்ப குறியறிந் தோரே” எனவருஞ் சூத்திரத்தால் ஆசிரியர் விரித்துரைத்துள்ளார். இதல்ை தொல்காப்பியரைது தெய்வங் கொள்கையின் உறுதிப் பாடு நன்கு புலனுதல் காண்க. போர்க்களத்துப்பட்ட வீரரைத் தெய்வமாக வழிபடுதற் பொருட்டுக் கற்காண்டலும், அவ்வாறு காணப்பட்ட கல்லே ஒழுங்கு செய்துகொள்ளுதலும், அதனை நீர்ப்படுத்துத் தூய்மை செய்தலும், அக்கல்லினை நிலைப்பட நடுதலும், அதன்கண் வீர ருடைய பெயரும் பிடும் பொறித்துத் தெய்வமாக்கிப் படைத்தலும் அதனை வாழ்த்திப் போற்றுதலும் ஆகிய கற்கோள்நிலை ஆறும் வெட்சித்திணைப் பாற்படுந் துறைப்பகுதிகளாமெனத் தொல்காப் பியனர் கூறுவர். தன் உயிரைப் பொருட்படுத்தாது செயற்கருஞ் செயல்களைச்செய்து உயிர்நீத்த வீரனை வாழ்க்கைக்கு வழி காட்டும் குலமுதல்வகைக்கொண்டு வழிபடுந் தமிழ்மரபினை இத்துறைப் பகுதிகள் இனிது புலப்படுத்தல் காண்க. வேலால் வீரர்க்கு வெற்றியுளதாகுக என வேலினைக் குறித்து விளக்கேற்றி வழிபடுதல் மரபு. இவ்விளக்கீடு கார்த்திகைத் திங்களில் கார்த்திகை நாளில் நிகழும் என்பர். இங்ங்ணம் வெற்றி கருதியேற்றிய விளக்கு நாற்புறமும் திரிபரந்து சுடர் ஓங்கிக் கொழுந்து விட்டெரிந்ததென்று அவ்விளக்கு ஏதுவாக வேலின் வெற்றியைக்காட்டி ஆக்கங்கூறி வாழ்த்துவர் அறிவோர். இந்நிகழ்ச்சியினை வேலை நோக்கிய விளக்கு நிலை’ எனப் பாடாண்திணைக்குரிய துறைகளுளொன்ருக வைத்துத் தொல்காப்பியர்ை குறிப்பிடுவர்.