பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 தொல்காப்பியம் 3. மகாவீரர் என்பார் ஐம்பெரு விரதங்கள் அவற்றின் உட்பிரிவுகள், அறுவகையுயிர்கள் என்னுமிவற்றைக் குறித்துச் சமணர்களுக்கும் நிக்கந்தர்களுக்கும் கெளதமர் முதலாயினுேர்க் கும் உபதேசித்தருளினர் என்பர். இதல்ை உயிர்களை அறுவகை யாகப் பிரிக்கும் முறை சமண சமயம் ஒன்றற்கே பண்டைநாளில் உரியதாயிருந்தமை பெறப்படும். தொல்காப்பியர் ஒன்றறி வதுவே என்பது முதலாகக்கூறும் உயிர்ப்பாகுபாடு சமண் சமயக் கொள்கையொடு முற்றும் பொருந்துதல் காணலாம். இவ்வுயிர்ப் பாகுபாட்டினைத் தொல்காப்பியர் தாமே அமைத்துக்கொண்டா ரல்லரென்பதும் சமணசமயக் கோட்பாட்டினைத் தழுவியே இங்ங்னங் கூறினரென்பதும் நேரிதினுணர்ந்தோர் நெறிப் படுத்தினரே என ஆசிரியர் தமக்கு முன்னேர் கொள்கையாகக் கூறுதலால் நன்கு விளங்கும். 4. சமண சமயத்தவராகிய பட்டாஹளங்கள் என்பார் தாம் எழுதிய கன்னட சப்த தாநூ சாசனத்தில் 'நிமேஷோன் மேஷ காலேந ஸ்மம் மாத்ராது ஸ் ஸ்ம்ருதா: அங்குலீஸ் போடநம் யாவத்காலே மாத்ரேதி லோச்யதே' என மாத்திரை யிலக்கணங் கூறும் பழைய சுலோகமொன்றை மேற்கோளாக எடுத்துக்காட்டியுள்ளார். இதன்கண் கண்ணிமை யும் கைந்நொடியுந் தனித் தனியே மாத்திரைக்குரிய அளவாகக் கூறப்பட்டிருத்தல் காணலாம். சமணரால் மேற்கோளாகக் காட்டப்பெற்ற இச்சுலோகமும் பழைய சமணுசிரியரொருவராலி யற்றப் பெற்றதாதல்வேண்டும். எனவே மாத்திரைக்குரிய இலக்கணம் சமணர் கண்டுணர்த்தியதென்பது விளங்கும். ஆசிரியர் தொல்காப்பியனரும் 'கண்ணிமை கைந்நொடியவ்வே மாத்திரை, நுண்ணிதி னுணர்ந்தோர் கண்டவாறே" என