பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 தொல்காப்பியம் தென்பதனை நேரிதினுணர்ந்தோர் நெறிப்படுத்தினரே எனவருந் தொடரால் தொல்காப்பியனர் தெளிவு படுத்தினமை காண்க. (4) பட்டாஹளங்கர் எழுதிய கன்னட சப்தாநூ சாசனத்தில் மேற்கோளாக எடுத்தாளப்பெற்ற வடமொழிச் சுலோகம் மாத் திரையின் இயல்புரைப்பதாகும். இதனை மேற்கோளாக எடுத் தாண்ட ஆசிரியர் பிற்காலத்தவர். இவரால் மேற்கோளாகக் காட்டப்பட்ட இச்சுலோகம் இந்நூலாசிரியர்க்குக் காலத்தால் முற்பட்டது எனக் கூறுதல் பொருத்தமுடையதேயன்றித் தொல் காப்பியத்திற்கு முற்பட்ட தொன்மையுடையதென்று கூறுதல் பொருந்தாது. வடமொழிவாணர்களால் மதிக்கத்தக்க பழைய வியாகரண நூலைச் சேர்ந்தது இச்சுலோகம் எனக் கூறுதற் கிடமில்லாமையொன்றே இச்சுலோகம் மிகமிகத் தொன்மை யுடையதன்றென்பதனை வலியுறுத்தும். இச்சுலோகத்தினைச் சமண சமய ஆசிரியரொருவர்தம் நூலில் மேற்கோளாக எடுத்தாண்ட மையால் இச்சுலோகத்தை இயற்றிய ஆசிரியரும் சமணராகவே இருத்தல்வேண்டும் எனத்துணிந்துரைத்தல் வியப்பாகவுளது. தெளிந்த சைவசமயச் சான்ருேராகிய திருவாரூர் வைத்தியநாத நாவலரும் சிவஞான சுவாமிகளும் தத்தம் நூலுரைகளில் நன்னூற் சூத்திரங்களே மேற்கோளாக எடுத்துக்காட்டினமை கொண்டு அப்பெருமக்களால் எடுத்தாளப்பெற்ற நன்னூற் சூத்திரங்களும் சைவசமய ஆசிரியரால் இயற்றப்பட்டனவே எனத் துணிந்து கூறுதல் பொருந்துமா? (5) இயற்றமிழ் நூலாகிய தொல்காப்பியத்திற் கூறப்படும் விதிகள் யாவும் தமிழ்மொழிக்கேயுரியவன்றி வடமொழி முதலிய பிறமொழிகளை நோக்கியெழுந்தன அல்ல. ஆகவே தொல்காப் பியத்தில் நிலைமொழி வருமொழிகளாக வைத்துப் புணர்க்கப் படும் எண்கள் யாவும் தமிழ் எண்களே எனத் தெளிதல்வேண்டும். இக்கருத்தினை உளங்கொளாது தொல்காப்பியப் பொருளை