பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு i57 ஆராய முற்படுதலால் உளவாம் வழுக்கள் பல. ஆம்பல், தாமரை, வெள்ளம் என்னும் எண்கள் ஆசிரியர் தொல்காப்பியனர் காலத்துக்கு முன்னர்த்தோன்றி அவ்வாசிரியர் காலத்திற் பயின்று வழங்கிய தமிழெண்களாகும். "ஐ அம் பல் என வருஉம் இறுதி எனவருஞ் சூத்திரத்தால் இவ்வெண்களுக்குத் தொல் காப்பியனர் புணர்ச்சிவிதி கூறியுள்ளார். ஆசிரியர் வட சொற் களே எடுத்தோதி இலக்கணங்கூருர் என்ப ஆகலின், ஆசிரிய ரால் எடுத்துரைக்கப்பட்ட இவ்வெண்கள் தமிழெண்களே என் பது நன்கு தெளியப்படும். ஆம்பல், தாமரை என்னும் இவ் வெண்களையே பின்வந்தோர் குமுதம், பதுமம் என முறையே மொழிபெயர்த்துக் கொண்டனர். தொன்றுதொட்டு வழங்கிய தமிழெண்களையும் இடைக்காலத்தில் வந்து புகுந்த வடமொழி எண்களையும் பிங்கலந்தை யென்னும் நூல் பின்வருமாறு வரிசைப் படுத்துத் தொகுத்துரைக்கின்றது. 'ஏகம் எண்மடங்கு கொண்டது கோடி’ 'கோடி எண்மடங்கு கொண்டது சங்கம்” 'சங்கம் எண்மடங்கு கொண்டது விந்தம்” 'விந்தம் எண்மடங்கு கொண்டது குமுதம்" "குமுதம் எண்மடங்கு கொண்டது பதுமம்" "பதுமம் எண்மடங்கு கொண்டது நாடு” “நாடெண் மடங்கு கொண்டது சமுத்திரம்” "சமுத்திரம் எண்மடங்கு கொண்டது வெள்ளம்" இம்முறைப்படி நோக்குங்கால் எட்டாந் தானத்தது கோடி, 1. தொல், சொல், சூத்திரம். நச்சிளுர்க்கினியருரை,