பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 தொல்காப்பியம் விந்தம், இருபத்தொன்பதாம் தானத்தது குமுதம் (ஆம்பல்), முப்பத்தாருந் தானத்தது பதுமம் (தாமரை), நாற்பத்துமுன்ருந் தானத்தது நாடு (குவளை), ஐம்பதாம் தானத்தது சமுத்திரம் (நெய்தல்), ஐம்பத்தேழாந் தானத்தது வெள்ளம் என்பன புலனும். சங்கினது உருவம் இருகோணம். ஆதலின் கோடி கோடியைச் சங்கம் என்றனர். விந்தத்தின் உருவம் முக்கோணம். ஆதலின் கோடி கோடி கோடியை விந்தம் என்றனர். ஆம்பலின் உருவம் நாளிதழ்.ஆதலின் கோடி கோடி கோடி கோடியை ஆம்பல் என்ற னர். தாமரையின் உருவம் ஜயிதழ். ஆகவே கோடி கோடி கோடி கோடி கோடியைத் தாமரை யென்றனர். குவளையின் உருவம் ஆறிதழ் ஆதலின் கோடி கோடி கோடி கோடி கோடி கோடியைக் குவளை யென்றனர், சமுத்திரம் ஏழு என்பவாகலின் கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடியைச் சமுத்திரம் என்றனர். வெள்ளம் எட்டுத் திசையிலும் பரவும் இயல்பினதா தலின் கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடியை வெள்ளம் என்றனர்." பிங்கலந்தை நூலாசிரியர் கூறியவாறு சமுத்திரம் எண் மடங்கு கொண்ட பேரெண் வெள்ளமாகும். இவ்வெள்ளம் என் னும் பேரெண்ணினை இதனின் எண் மடங்கு தாழ்ந்த சிற்றெண் ளுகிய சமுத்திரம் என்பதன் மொழி பெயர்ப்பாகக் கூறுதல் முன்னேர் நூலின் முரண்பட மொழிதலென்னுங் குற்றமாம். பாஸ்கராசாரியர் இயற்றிய லீலாவதியிற் குறிக்கப்படும் அப்ஜம் என்னும் எண்நூறு கோடியைக் குறிப்பதாகும். தமிழெண்ணுகிய தாமரை யென்பது கோடி கோடி கோடி கோடி கோடியாகிய முப்பத்தாருந் தானத்து எண்ணுகும். இதனைப் பதுமம் என்ற சொல்லால் பிங்கலந்தை கூறும். பத்தாந்தானத்து எண்ணுகிய அப்ஜம் என்பதனையும் முப்பத்தாருந் தானத்து எண்ணுகிய 1. யாழ் நூல், பக்கம் 292-294.