பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 169 பதுமம் (தாமரை) என்பதனையும் ஒன்றென்றல் மாறுகொளக் கூறலாமென்க. திருமாலைப் பரவிய 2-ஆம் பரிபாடலில் ஆம்பல் என்னும் எண் எண்ணப்பட்டிருக்கவும் அதனைச் சமணர் கண்டதாகச் சொல் வது ஏற்புடைத்தன்று. சமணர்க்களுக்குரிய தத்துவார்த்திகம் சூத்திரத்திற்கு உபாஸ்வாதி இயற்றிய ஸ்வோபஜ்ஞ பாஷ்யம் தொல்காப்பியத்தை நோக்க நெடுங்காலம் பிற்பட்டுத் தோன்றிய தாகும். சமண புத்த சமயங்கள் இந்நாட்டில் தோன்றுவதற்கு முன்னிருந்தவர் தொல்காப்பியஞர் என்பது தமிழகத் தொன்மை வரலாறறிந்தார் அனைவர்க்கும் உடன்பாடாகும். அங்ங்னமாகவும் தொல்காப்பியஞர்க்கு நெடுங்காலம் பிற்பட்டுத் தோன்றிய தத்துவார்த்திக சூத்திர பாஷ்யத்தைத் தொல்காப்பியத்தினும் பழமையுடையதாகப் பிறழக்கொண்டு அந்நூலுரையிற் குறிக்கப் பட்ட குமுதம் என்பதனையே தொல்காப்பியனுர் ஆம்பல் என மொழிபெயர்த்தாரென்றும் அதனுல் அவரும் சமண சமயத்தவரே யென்றும் கூறுதல் எவ்வாற்ருனும் பொருந்தாதென்க, (6) பண்ணைத் தோற்றுவிக்கும் செய்யுட்களைப் பண்ணத்தி யென வழங்குவர். பாட்டின்கண் கலந்த பொருளை யுடையதாகிப் பாட்டுக்களின் இயல்பையுடையன பண்ணைத் தோற்றுவிக்குஞ் செய்யுட்கள் என்பார், " பாட்டிடைக் கலந்த பொருள வாகிப் பாட்டி னியல பண்ணத் திய்யே” என்ருர் தொல்காப்பியஞர். பண்ணைத் தோற்றுவித்தலாற் பண்ணத்தியெனப் பெயராயிற்றென்றும் பண்ணத்தியாவன இசைத் தமிழில் ஒதப்படும் சிற்றிசையும் பேரிசையு முதலாயின என்றும் இவை இசை நூலின் பாவினம் என்றும் இளம்பூரணர் தெளிவாக விளக்கியுள்ளார். அங்ங்னமாகவும் ப்ரக்ளுப்தி என்னும் வடசொல்லே பண்ணத்தியெனப் பாகதச் சிதைவாயிற்