பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvii வருங்கால் ஆசிரியர் தொல்காப்பியனர் காலம் பற்றியும் பிற கொள்கைகள் பற்றியும் வேண்டும் திருத்தங்களை அவ்வப்பொழுது உடனிருந்து அன்புடன் கூறி உதவிய ஆராய்ச்சிப் பேரறிஞரும் தமிழ் ஆராய்ச்சித்துறை விரிவுரையாளரும் ஆகிய திரு T. W. சதாசிவ பண்டாரத்தார் அவர்களுக்கும் இந் நூல் விரைவில் வெளிவருவதற்கு வேண்டும் ஏற்பாடுகளை அன்புடன் செய்துதவிய பல்கலைக்கழக நூல் வெளியீட்டுத் துறைத் தலைவர் திரு . M. சோமசுந்தரம் பிள்ளை அவர்களுக்கும் எனது உளங்கனிந்த நன்றியினைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். இந்நூலை விரைவில் வனப்புற அச்சியற்றி யுதவிய சென்னை புரீ ராம பிரசாத் அச்சகத்தாரது பணி பாராட்டற்குரியதாகும். 'ஒல்காப் பெருமைத் தமிழின் சிறப்புணர்த்தும் தொல்காப் பியமெங்கே யானெங்கே-பல்காலும் தோய்ந்தறியா தேன்சொல்லும் கொள்வர் துகள்தீர ஆய்ந்த அறிவினவர்; க. வெள்ளைவாரணன்