பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 எழுத்ததிகாரம் னகர மீருகவுள்ள முப்பதும் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்னும் மூன்றும் ஆக முப்பத்து முன்றகும். இவற்றிற்கு எழுத் தென்னும் பெயர் தமக்கு நெடுங்காலத்திற்கு முன்னே தோன்றி வழங்கியதென்பதனே எழுத்தெனப்படுப, அகர முதல் னகர இறுவாய் முப்பஃது என்ப' எனவரும் சூத்திரத்தால் தொல்காப் வியஞர் குறிப்பிடுகின்ருர், விலங்கு முதலிய அஃறிணையுயிர்களினின்றும் மக்களை வேறு பிரித்து உயர்திணை மாந்தராக உயர்த்தும் அறிதற் கருவியாக விளங்குவது மொழி. அத்தகைய மொழிகளுள் பேச்சு வழக் கொன்றே பெற்று எழுத்துருப் பெருதனவும் உள்ளன. பேச்சு மொழி ஒரிடத்தும் ஒருகாலத்துமே பயன்படும். எழுத்துமொழியோ தன்மை, முன்னிலை, படர்க்கையாகிய மூவிடத்தும் இறப்பு, நிகழ்வு, எதிர்வு ஆகிய முக்காலத்தும் ஒப்பப் பயன் தருவதாகும். பனை யோலேகளிலும் கல்லிலும் பிற பொருள்களிலும் எண்ணங்களே எழுத்தாற் பொறித்துவைக்கும் வழக்கம் பல்லாயிர ஆண்டு களுக்கு முன்னரே நம் தமிழ் மக்களால் கைக்கொள்ளப்பெற்று வருகின்றது. செல்லுந் தேஎத்துப் பெயர்மருங் கறிமார், கல்லெறிந் தெழுதிய நல்லரை மராஅத்த, கடவுளோங்கிய காடேசு கவலை (மலையடு - 394-395) எனவும், பெயரும் பிடும் எழுதி யதர்தொறும், பிலிதுட்டிய பிறங்குநிலை நடுகல் (அகம் - 131) எனவும் பொறிகண்டழிக்கும் ஆவனமாக்களின் (அகம் . 77) எனவும் வரும் சங்க இலக்கியத் தொடர்களால் இச்செய்தி புலளுதல் காணலாம். மக்கள் தம்மாற் பேசப்படும் மொழியிலமைந்த ஒலிகளைத் தனித்தனியாகப் பிரித்தறியும் உணர்வுபெற்ற பின்னர்த்தான் கருத்துருவாகிய அவ்வொலிகளைக் கட்புலனுக வரிவடிவில் எழுதுதல்கூடும். அறிஞர்களது நன்முயற்சியால் ஒலிகளுக்குரிய வரிவடிவங்க ளமைந்த பின்புதான் அவ்வொலிகளுக்கு எழுத் தென்னுங் காரணப்பெயர் வழங்கியிருத்தல் வேண்டும், இவ்