பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

德 தொல்காப்பியம் நுதலியபொருள் வுண்மை எழுதப்படுதலின் எழுத்தே' எனவரும் பழைய சூத்திரத் தொடரால் அறிவுறுத்தப்பட்டமை காண்க. மெய்யெழுத்துக்கள் புள்ளிபெறுதலும் எகர ஒகரக் குறில்கள் புள்ளிபெறுதலும் குற்றியலுகரம புள்ளிபெறுதலும் மகரக்குறுக்கம் மெய்க்குரிய மேற்புள்ளியோடு உள்ளேயொரு புள்ளிபெறுதலும் ஆகிய எழுத்து வடிவங்களிற் சிலவற்றைத் தொல்காப்பியனர் தம் நூலகத்து விளக்கியுள்ளார். ஆகவே தொல்காப்பியர்ைக்கு நெடுங்காலத்திற்கு முன்பே தமிழ் முன்னேர் அகர முதல் னகர விறுவாயுள்ள எழுத்துக்களுக்குரிய வரிவடிவங்களே யமைத்துத் தமிழ் நெடுங்கணக்கினை ஒழுங்கு செய்துள்ளமை நன்கு தெளியப்படும். எழுத்திலக்கண வகை தொல்காப்பியஞர் தாம் கூற எடுத்துக்கொண்ட எழுத் திலக்கணத்தினை நூன்மரபு, மொழிமரபு, பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உருபியல், உயிர்மயங்கியல், புள்ளிமயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என ஒன்பதியல்களான் உணர்த்து கின்ருர், எழுத்து இனத்தென்றலும், அவை இன்ன பெயரின என்றலும் இன்ன முறைமையவென்றலும், இன்ன அளவின வென்றலும், இன்ன பிறப்பினவென்றலும், இன்ன புணர்ச்சிய வென்றலும், இன்ன வடிவினவென்றலும், இன்ன தன்மைய வென்றலும் என எட்டு வகையாகவும், எழுத்தினது உண்மைத் தன்மை, குறைவு, கூட்டம், பிரிவு, மயக்கம், மொழியாக்கம், நிலை, இனம், நிலையிற்றென்றல், நிலையாதென்றல், நிலையிற்றும் நிலை யாதுமென்றல் என இன்னுேரன்ன எட்டிறந்த பலவகையாகவும் எழுத்திலக்கணத்தின ஆசிரியர் வகைப்படுத்துணர்த்தினரென வும் இவ்வதிகாரத்திற் கூறப்படும் இவ்விலக்கணங்கள் யாவும் கருவியும் செய்கையும் என இரு வகையாய் அடங்குமெனவும் 1. யாப்பருங்கல விருத்தி மேற்கோள், 12க், 18.