பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூன்மரபு 盤 அவ்விரண்டனுட் கருவியை நூன்மரபு முதலிய நான்கியல்களாலும் செய்கையைத் தொகை மரபு முதலிய ஐந்தியல்களாலும் தொல் காப்பியனுள் உணர்த்தினரெனவும் உரையாசிரியர் இளம்பூரண அடிகள் வகைப்படுத்து விளக்கியுள்ளார். 1. நூன்மரபு 'இவ்வதிகாரத்தாற் சொல்லப்படும் எழுத்திலக்கணத்தினை ஓராற்ருற் ருெகுத்துணர்த்துதலின் நூன்மரபென்னும் பெயர்த்து என இளம்பூரணரும், இத்தொல்காப்பியமெனும் நூற்கு மரபா ந் துணைக்கு வேண்டுவனவற்றைத் தொகுத்துணர்த்துதலின் நூன் மரபென்னும் பெயர்த்தாயிற்று என நச்சினர்க்கினியரும், 'அஃதாவது நூலினது மரபு பற்றிய பெயர் கூறுதல். மலைகடல்யாறு என்றற் ருெடக்கத்து உலகமரபு பற்றிய பெயர் போலாது ஈ ண் டு க் கூறப்படும் எழுத்து, குறில், நெடில், உயிர், மெய் என்றற் ருெடக்கத்துப் பெயர்கள் நூலின்கண் ஆளுதற்பொருட்டு முதனூலாசிரியனுற் செய்துகொள்ளப் பட்டமையின் இவை நூன்மரபு பற்றிய பெயராயின எனச் சிவஞானமுனிவரும் இவ்வியலின் பெயர்க்காரணம் கூறினர். இவ் வியலுட் கூறப்படும் எழுத்துக்களின் பெயர் முதலியன அனைத் தும் தொல்காப்பியளுர்க்கு முற்காலத்தவரான பண்டைத் தமிழ்ச் சான்ருேர் நூல்களிற் சொல்லப்பட்ட எழுத்தியல் மரபுகளாய் இந்நூலில் ஆசிரியரால் எடுத்தாளப்பட்டனவாம். என்ப, புலவர், மொழிய, என்மஞர் புலவர் என்ருங்கு முன்னையோர் கருத்தாக இவ்வியலில் வருங் குறியீடுகளை ஆசிரியர் எடுத்துரைத்தலால் இவ்வுண்மை விளங்கும். இவ்வியலிற் கூறப்படும் இலக்கணம் மொழியிடை எழுத்திற்கன்றித் தனிநின்ற எழுத்திற்குரியதாகும். குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற மூன்றும் யாதாயினும் ஒரு சொல்லைச் சார்ந்துவரினல்லது தனியெழுத் தாக ஒலித்து நிற்கும் இயல்புடையன அல்ல. இவற்றின் இயல்