பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புணரியல் f : நிலைமொழியை நிறுத்தசொல் என்றும் வருமொழியைக் குறித்துவருகிளவியென்றும் தொல்காப்பியஞர் வழங்குவர். நிறுத்த சொல்லின் ஈற்றெழுத்தோடு குறித்துவருகிளவியின் முதலெழுத்துப் பொருந்த அவ்விருமொழிகளும் இயைந்து வருதலே புணர்ச்சியெனப்படும். அப்புணர்ச்சி உயிரீற்றுச் சொல் முன் உயிர் வருமிடம், உயிரீற்றுச் சொல்முன் மெய்வருமிடம், மெய்யீற்றுச் சொல்முன் உயிர் வருமிடம், மெய்யீற்றுச் சொல்முன் மெய் வருமிடம் என எழுத்துவகையால் நான்கு வகைப்படும்; பெயரொடு பெயர், பெயரொடு தொழில், தொழிலொடு பெயர், தொழிலொடு தொழில் எனச் சொல்வகையால் நான்காகும். மொழிகள் புணருங்கால் இடைநின்ற எழுத்துக்கள் ஒன்று மற் ருென்ருகத் திரிதலை மெய்பிறிதாதல் என்றும், அவ்விடத்துப் புதியவெழுத்துத் தோன்றுதலே மிகுதல் என்றும், அங்கு முன் னிருந்த எழுத்துக் கெடுதலைக் குன்றல் என்றும், இவ்வேறு பாடெதுவுமின்றி அவ்விருமொழிகளும் முன்னுள்ளவாறு புணர்ந்து நிற்றலை இயல்பென்றும், இந்நான்கினையும் மொழிபுணரியல்பு என்றும் ஆசிரியர் குறியிட்டு வழங்கியுள்ளார். நிறுத்தசொல்லும் குறித்து வருகிளவியும் தனித்தனியே அடைமொழி பெற்றுவரினும் நிலைமொழி வருமொழியாகப் புணர்தற்கு உரியனவாம். முன் பின்னக மாறி நின்ற மருஉ மொழிகளும் நிலைமொழி வருமொழி யாகப் புணர்க்கப்படுதலுண்டு. மொழிப்புணர்ச்சி வேற்றுமைப் புணர்ச்சியெனவும் அல் வழிப் புணர்ச்சியெனவும் பொருள் வகையால் இருதிறப்படும். இவற்றுள் வேற்றுமைப் புணர்ச்சியை வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையென்றும் அ ல் வழி ப் புணர்ச்சியை வேற்றுமையல்வழிப் புணர்மொழி நிலையென்று ஆசிரியர் வழங்கியுள்ளார். இவ்விருவகைப் புணர்மொழிகளும் எழுத்து மிகுதலும் சாரியை மிகு த லு ம் ஆகிய இருதிறத்தாலும் நடப்பன. வேற்றுமை யுருபாவன ஐ, ஒடு, கு. இன், அது, கண்