பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புணரியல் 靈露 சொற்களை நிலைமொழி வருமொழியாகப் பிரித்துக்காணும் முறையினைத் சொற்சிதர் மருங்கு எனவும் பெயர் சாரியை உருபு முதலிய சொல்லுறுப்புக்கள் ஒன்றன்பின்னுெருக ஒட்டி நடத்தற்குரிய மொழிவழக்கினை ஒட்டுதற்கொழுகிய வழக்கு' எனவும் ஆசிரியர் குறியிட்டு வழங்கியுள்ளார். நிறுத்த சொல் லுங் குறித்து வருகிளவியுமாகப் பிரித்தற்கேற்றவாறு ஒட்டி நில் லாது, நிலாக்கதிர், நிலாமுற்றம் என்ருற் போல உடங்கியைந்து நிற்கும் புணர்மொழிகள் ஒட்டுதற்கொழுகிய வழக்கின அல்ல வெனவுங் ஆகவே அவை சாரியை பெருவெனவும் இளம்பூரணர் கூறிய விளக்கம் இவண் சிந்தித்துணரத்தகுவதாம். காரம், கரம், கான் என்பன எழுத்தின் சாரியைகளாம். அவற் றுள் கரம், கான் என்னும் இரு சாரியைகளையும் நெட்டெழுத்துப் பெறுதலில்லை. குற்றெழுத்து மேற்கூறிய மூன்று சாரியைகளே யும் பெறும். நெட்டெழுத்துக்களில் ஐ, ஒள என்னுமிரண்டும் கான் சாரியையும் பெறும். என இவ்வியலில் இயைபுடைமை கருதி எழுத்துச் சாரியைகளும் உடன் கூறப்பட்டன. மெய்யீற்றின்முன் உயிர்முதன் மொழி வருங்கால் வருமொழி முதலிலுள்ள உயிர் தனித்து நில்லாது; மெய்களுக்குரிய புள்ளி பெறுதலாகிய அவ்வியல்பினைக் கெடுத்து நிலைமொழியீற்றிலுள்ள அம்மெய்யுடன் கூடி நிற்கும். இங்ஙனம் கூடிய உயிர் பிரிந்து நீங்கியவழி நிலைமொழியீற்றிலுள்ள மெய் மீண்டும் தன் பழைய வடிவாகிய புள்ளியைப் பெறும். இவ்வியல்பினை இவ்வியலின் 36, 37-ஆம் சூத்திரங்களால் ஆசிரியர் குறிப்பிடுவர். குற்றிய லுகரமும் மெய்யீறுபோலுந் தன்மையத்து என இவ்வியலின் மூன்ரும் சூத்திரத்தால் ஆசிரியர் மாட்டேற்றிக் கூறியுள்ளார். இம்மாட்டேறு புள்ளி பெறுதலும் உயிரேற இடங்கொடுத்தலு மாகிய மெய்யின் தன்மைகளுள் புள்ளிபெறுதலே விலக்கி உயி றோ இடங்கொடுத்தலாகிய அவ்வளவுக்குச் செல்லுதலின் இம் மாட்டேறு ஒருபுடைச்சேற லெனவுணர்க' என உரையாசிரியர்