பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ தொல்காப்பியம் நுதலியபொருள் களைத் தொகுத்துணர்த்துதலின் தொகைமரபெனப் பட்டது எனினுமமையும். நிலைமொழியும் வருமொழியும் மேல் புணரியலிற் கூறிய கருவிகளால் தொக்குப்புணரும் செய்கை கூறுவது இவ்வியலாதலின் இது புணரியலோடு இயைபுடைத்தாயிற்று. இவ்வியல் முப்பது சூத்திரங்களையுடையது. இதன்கண் அல்வழியும் வேற்றுமையுமாகிய இருவழியிலும் கசதப என்னும் வல்லெழுத்து முதன்மொழி வருங்கால் மிகுதற்குரிய மெல் லெழுத்துக்கள் முறையே ங் ஞ ந ம என்பனவாம் என்னும் வருமொழிக் கருவியும், இருபத்துநான்கீற்றின் முன்னும் வன்கண மொழிந்த கணங்களுக்கு இருவழியும் வருமொழிமுடியும், ணகர னகர வீற்றுச் சொற்களுக்கு இருவழியும் நிலைமொழி முடியும், லகர, னகர வீறுகளின் முன்னும் ணகர, ளகர வீறுகளின் முன் னும் வரும் தகர நகரங்கள் முறையே றகர னகரங்களாகவும் டகர ணகரங்களாகவும் திரியு மென்னும் வருமொழிக் கருவியும், உயிரையும் மெய்யையும் இறுதியாகவுடைய முன்னிலை வினைச் சொற்கள் வல்லின முதன்மொழி வருங்கால் இயல்பும் உறழ்ச்சியு மாகிய இருநிலைமையையுடையன வென்பதும், ஒளகாரத்தையும் ஞநமவ என்னும் மெய்களையும் குற்றியலுகரத்தையும் ஈருகவுடைய முன்னிலை வினைச்சொற்கள் முற்கூறிய முடிபிற்கு முற்றும் பொருந்துவன அல்ல என்பதும், உயிரையும் மெய்யையும் ஈருக வுடைய உயர்தினைப் பெயர்கள் நான்குகணத்தும் இருவழியும் இயல்பாய் முடியுமென்பதும், அவற்றுள் இகரவீற்று உயர்திணைப் பெயர் திரிந்து முடியுமிடனுமுண்டென்பதும், அஃறிணை விரவு பெயர் இயல்பாய் முடிவனவுமுள வென்பதும், முன்ரும் வேற்று மைப் புணர்ச்சியிலும் இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சியிலும் உள வாகுந் திரிபுகளும், இகர ஐகாரவீற்றுப் பெயர்களுக்கு அல்வழி முடியும், இகர ஐகாரவீற்றுள் ஏழாம் வேற்றுமையிட்ப் பொருளுணர நின்ற இடைச்சொல் முடியும், நெட்டெழுத்தின் பின்னின்ற மெய்யீறு கெடுதல் குற்றெழுத்தின் பின்னின்ற இறுதிமெய்