பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புள்ளி மயங்கியல் 23 ஊர்ந்து நின்ற ககரமெய்யொடுங்கெட அங்குள்ள டகரம் ணகர மாய்த் திரிதல் செய்யுட்கண்வருந் திரிபாகும். 8. புள்ளி மயங்கியல் மெய்யீறு வன்கணத்தோடும் பிறகணத்தோடும் புணருமாறு கூறுவது புள்ளி மயங்கியலாகும். மெய்யிறெல்லாம் புள்ளியொடு நிற்குமாதலின் புள்ளியென்ருர். மெய்யீற்றுள் உகரம்பெறுவன, இறுதி கெட்டு வல்லெழுத்து மிகுவன மெல்லெழுத்து மிகுவன, இறுதிகெடாது வல்லெழுத்து மிகுவன மெல்லெழுத்து மிகுவன. வல்லெழுத்தும் மெல்லெழுத்தும் உறழ்ந்து முடிவன, இயல்பாய் வருவன, சாரியை பெறுவன, திரிந்து முடிவன என்னும் இவ் வகையினுள் இவ்வியலிற் கூறப்பட்ட விதிகள் யாவும் அடங்கு வனவாம். ஞ, ந, ண, ம, ல, ள என்னும் மெய்களே இறுதியாகவுடைய தொழிற்பெயர் முன்னர் வல்லெழுத்து முதன்மொழி வரின் இரு வழியும் வருமொழி வல்லெழுத்து மிக நிலைமொழியீறு உகரம் பெற்று முடியும். நகர வீற்றுத் தொழிற்பெயர் வேற்றுமைக்கண் உகரம்பெருது அகரம்பெற்று முடியும். ஈம், கம், உரும், மின், பின், கன், வல், தெவ், புள், வள் என எடுத்தோதிய பெயர் களும் தொழிற்பெயர்போல இருவழியும் உகரம்பெற்று வல் லெழுத்து மிகுவனவாம். அவற்றுள் கன் என்னுஞ்சொல் வேற்று மைக்கண் அகரம்பெற்று வல்லெழுத்து மிகப்பெறும். வல் என்னுஞ் சொல்லின்முன் நாய், பலகை என்பன வருமொழி யாய்வரின் அவ்வழி உகரமின்றி அகரம்பெற்று முடியும். வெரிந் என்ற சொல், இறுதி நகரவொற்றும் அச்சொல் பெற்ற அகரமும்கெட வல்லெழுத்து வரும்வழி அவ்வல்லெழுத் தாயினும் அதன் கிளையெழுத்தாகிய மெல்லெழுத்தாயினும் மிக்கு