பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புள்ளி மயங்கியல் 27 தலும் பெறும். இருல் என்பது வருமொழியாகவரின் தேன் என்பதன் னகரம் கெட்டுத் தகரம் இரட்டித்து முடியும். சாத்தன், கொற்றன் முதலிய இயற்பெயர் முன்னர்த் தந்தையென்பது வருமொழியாய்வரின், தந்தை யென்பதன் முதலிலுள்ள தகரங்கெட்டு, அதன்மேலேறிய அகரங்கெடாது நிற்ப, நிலைமொழியியற்பெயரிலுள்ள அன்கெட்டு, அங்கு நின்ற மெய்யின்மேல் வருமொழி முதலிலுள்ள அகரம் ஏறிமுடியும். முற்கூறிய இயற்பெயருள் ஆதன், பூதன் என்னும் இருபெயர் களும் வருமொழியாகிய தந்தையென்னும் முறைப்பெயரொடு புணருங்கால் இவ்வியற் பெயர்களின் இறுதிநின்ற அன்கெட எஞ்சிய தகரவொற்றும், தந்தை என்பதில் முன்கூறியபடி தகரங் கெட எஞ்சிய அகரவுயிரும் சேரக்கெட்டு, ஆந்தை, பூந்தை என முடிவனவாம். இப்பெயர்கள் சிறப்புப் பண்படுத்துவருங்கால் அங்ங்னந்திரிதலின்றி இயல்பாவன என்பர். மேற்கூறிய இயற் பெயர்கள் இன்ற்ைகு மகன் இன்னன் என்னும் முறையில் ஒட்டி நிற்குங்கால் நிலைமொழிப் பெயரீற்றின் அன்கெட்டு அம்சாரியை பெற்றுப் புணர்தலுமுண்டு. முன் என்னும் சொல்முன் இல் என்னுஞ்சொல் வந்து புணரின் இடையே றகரவொற்றுத் தோன்றி முன்றில் எணமுடிதல் தொன்று தொட்டு மருவிவழங்கும் இலக்கண முடிபாம். பொன் என்னுஞ்சொல், ஈற்றில் னகரம்கெட லகரவுயிர்மெய்யும் மகர மெய்யும்பெற்றுப் பொலம் எனத் திரிந்துவழங்கும். இல் என்னும் சொல், வீட்டை யுணர்த்தாது இல்லாமையென்னும் பொருளை யுணர்த்துங்கால், ஐகாரம்பெற்று வருமொழி வல்லெழுத்து மிகுதலும், மிகாமையும், இயல்பாதலும், ஆகாரம்பெற்று வல்லெழுத்து மிகுதலும் ஆகிய நான்குமுடியினை யுடையதாகும்.