பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளவியாக்கம் 37 எனப் பிற்காலத்தார் வழங்குவர். அறிவார்க்குக் கருவியாகிய சொல் அறிசொல்லாயிற்று. உயர்திணையென்பது மற்றுள்ள பொருளெல்லாவற்றினும் உயர்வாகியபொருள் என விசேடித்து நின்றமையின் பண்புத் தொகையாமென்றும், உயர்ந்த மக்கள் உயராநின்ற மக்கள் உயரும் மக்கள் என மூன்று காலமுங் கொள்வார்க்கு வினைத் தொகையுமாமென்றும், மக்களாவார் ஒருதன்மையரன்றி ஆண், பெண், அலியென்னும் வடிவு வேற்றுமையுடையராகலின் அவரெல்லாரிடத்தும் பொதுவாக அமைந்துள்ள மக்கட்டன்மை யைக் குறித்து மக்கள் இவர் என்னும் பொதுப் பொருண்மை உயர்திணையாமென்பதறிவித்தற்கு மக்களென்னது மக்கட் சுட் டென்ருரென்றும், மக்களல்லாத உயிருடையனவும் உயிரில் லனவும், அஃறிணையா மென்பதறிவித்தற்கு அவரல பிற என்ரு ரென்றும் கூறுவர் தெய்வச்சிலையார், உயர்திணையல்லாத திணை அஃறிணையாதலின் அல்திணை அஃறிணை யென்ருயிற்று. உயிர்பொருள், உயிரில்பொருள் என்னும் அஃறிணைப் பொருள்வகை யிரண்டனுள் உயிர்ப்பொருள் வகையுள் ஆண் பெண் வேறுபாடு காணப்படுமேனும் அவ்வேறுபாடு உயிருள்ள வற்றுள் சிலவற்றிற்கும் உயிரில்லாத பொருள்களுக்கும் இயையா மையால் உயிருள்ளன இல்லனவாகிய எல்லாவற்றிற்கும் பொருந்த ஒன்றறிசொல், பலவறிசொல் என்னும் இருவகைச் சொன் முடிபுகளே வகுக்கப் பெறுவனவாயின. மக்கட் பிறப்பிலே தோன்றிப் பெண்தன்மை மிகுந்தும் ஆண் தன்மை குறைந்தும் ஆண் பெண் என்னும் இருவகையுங் கலந்து நிற்கும் பேட்டினைக்குறித்த பெயர்ச்சொல்லும் தெய் வத்தைக் குறித்த பெயர்ச்சொல்லும் இருதிணை ஐம்பால்களுள் இன்னயால் எனத்தெரிந்து கொள்ளுதற்குக் கருவியாகிய ஈற்